Wednesday, February 5, 2014

தலைமையின் பலமும் பலவீனமும்

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

போக்குவரத்து சீராகிக்  கொண்டிருந்தது

30 comments:

  1. ஏர் ஓட்டத் தெரியா உழவனாய் இருக்குமோ?....

    ReplyDelete
  2. பார்த்த நிகழ்வில் மறைந்திருக்கும் ஒரு செய்தியை சொல்லி விட்டர்கள். அருமை

    ReplyDelete
  3. எல்லாரும் எரிச்சலில் சிகப்பு விளக்கு பொருத்தி போனவனை சபிக்க, உங்கள் கண்ணோட்டம் வேறு மாதிரி வித்தியாசமாக இருப்பது வரம் குரு !

    ReplyDelete
  4. சுயநலவாதிகளால் வீட்டையும் திருத்த முடியாது ,நாட்டையும் திருத்த முடியாது !
    த ம +1

    ReplyDelete
  5. "அவரவர் வேலையை அவரவர் நேர்மையாக செய்தால் போதும்" என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்... சிலருக்கு என்ன சொன்னாலும் புரியாது - அதிலும் முக்கியமாக கண்டதெல்லாம் குறை சொல்பவருக்கு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. எல்லோரும் எல்லாவற்றையும் வித்தியாசமாகப் பார்க்க முடியாது
    ஒரு சிலரால் மட்டுமே அது சாத்தியம்
    உங்கள் பார்வையும் வித்தியாசமானது

    ReplyDelete
  7. நண்பரின் கேள்வியும் உங்கள் பதிலும் அருமை..

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.

    தங்களின் கற்பனையில் மலர்ந்த சிந்தனையின் வரி வடிவம்
    ஒரு விழிப்புணர்வுக்கவிதையாக உள்ளது...சரியான கேள்வி சரியான பதில் .பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. த.ம.8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. ////"இதோ சில நிமிடங்களில்
    சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
    சீர் செய்யும் காவலருக்கு
    கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

    ஆயினும்
    மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
    மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
    அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
    அவருக்கும் நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
    என்ன ஆகிவிடப் போகிறது ///

    அருமையான விளக்கம்.......பாராட்டுக்கள் tha.ma 9

    ReplyDelete
  11. ஆழ்ந்த கருத்தை அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  12. மாற்று சிந்தனையையும் பிறர் மனம் கோணாது ஏற்றுக்கொள்ளும்வண்ணம் எடுத்துரைக்கும் வல்லமை தங்கள் எழுத்துக்கு உண்டு. இங்கும் அப்படியே. மனமார்ந்த் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  13. பொதுவாகப் போக்குவரத்துக் காவலரை எல்லோரும் திட்ட்க் கொண்டேதான் செல்வார்கள்! ஆனால் தங்களது பார்வை மிகவும் வித்தியாசமாக மட்டுமல்ல...அவரையும், அவரது தொழிலையும் மதித்துப், நேர் எண்ணத்தோடு, புரிதலோடு நோக்கிய விதமும், விளக்கமும் மிக அருமை! மன முதிர்ச்சியும், பக்குவமும் வெளிப்படுகின்றது!!

    வியக்கிறோம்! கற்றுக் கொண்டோம்!

    மிக்க நன்றி ஒரு அருமையான பாடம், புகட்டியதற்கு!

    த.ம.

    ReplyDelete
  14. விளக்கம் சிறப்பு! உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து சில படைப்புக்களை அறிமுகப்படுத்தியுள்ளேன்! சென்று பாருங்கள்! நன்றி!

    ReplyDelete
  15. வழிகாட்டிகள் குறித்த விளக்கம் அருமை சார்!
    போக்குவரத்து நெரிசலில் கூட தெளிந்த சிந்தனை!

    ReplyDelete
  16. அவர்கள் உயரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேண்டுமா. சங்கீதத்தில் குறை சொல்பவனுக்குப் பாடத்தெரிய வேண்டுமா?.

    ReplyDelete
  17. கண்டதும், விண்டதும் நன்று!

    ReplyDelete
  18. அருமையான பதில்..கடமையைச் செவ்வனே செய்தல் ஒன்றே போதுமே...

    ReplyDelete
  19. நுட்பமான சிந்தனை.

    ReplyDelete
  20. சிந்திக்கவைத்த பதிவு! நன்றி ஐயா!

    ReplyDelete
  21. விளக்கம் அருமை.

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா
    உங்கள் பார்வை வியக்கும்படி உள்ளது ஐயா. வித்தியாசமான சிந்தனை எங்களையும் சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

    ReplyDelete
  23. //"அவரவர் வேலையை அவரவர் நேர்மையாக செய்தால் போதும்" என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்...//
    தங்களின் பார்வையே தனிதான்
    நன்றி ஐயா

    ReplyDelete
  24. அந்த சிவப்பு விளக்கு சுழலில், அந்த காவலர் ஒரு பொம்மை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  25. சிந்திக்க வைக்கச் சிறந்த பதிவு

    ReplyDelete