Friday, March 28, 2014

மூடுபனி ( 5 )

நம்பிக்கை இல்லாதவற்றில் சில ஊசலாட்ட
சிந்தனையின் காரணமாக நம்பிக்கை
வந்து விடக்கூடாதுஎன்பதற்காகவும்
,சிலர் சில விஷயங்களைக்
கூடுதலாகத் தெரிந்து நம்மை குழப்பிவிடக்கூடாது
என்பதற்காகவும் நம்பிக்கையற்ற விசயங்களில்
கொஞ்சம் கூடுதல் விவரங்களைத்
தெரிந்து வைத்திருப்பேன் எப்போதும்.

அந்த வகையில் என் ஜாதக விஷயத்திலும்
நான் தேவையான சில கூடுதல் தகவல்களைத்
தெரிந்து வைத்திருந்தேன்

அதன்படி எனக்கு என் நட்சத்திரம்,ராசி,லக்னம்
மற்றும் மற்ற கிரங்கள் இருப்பு எல்லாம்
எனக்கு எப்போதும் அத்துப்படி

மிகச் சரியாக பிறந்த ஊர் பிறந்த தேதி,நேரம்
முதலாவைகள் இல்லாமல் லக்னம்,நட்சத்திரம்
முதலானவைகளை கண்டு பிடிக்க முடியாது
என்பதுவும் எனக்குத் தெரியும்

இந்த நிலையில் என்னையே சிறிது நேரம்
ஆழமாகப் பார்த்த சோமு அவர்கள்
"நீங்கள் புனர்பூச நட்சத்திரமாக,மிதுன ராசியாக
ரிஷப லக்னமாக இருக்கக் கூடும் " எனச்
சொன்னது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது

இப்படி சிறிது நேர உற்றுப் பார்த்தல் மூலம்
சட்டென இப்படி ஜாதக விவரங்களை மிகச் சரியாகச்
சொல்கிறார் என்றால் இவரிடம் ஏதோ ஒரு வித்தை
அல்லது ஒரு சூட்சும அறிவு இருக்கவேண்டும் என
எனக்கு நிச்சயமாகப் பட்டது என்றாலும்...

 ஹிப்னாடிசத் தூக்கத்தில்
என்னை இருக்க வைத்த சமயத்தில் என்னிடமிருந்தே
இந்தத் தகவலைத் தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது
என பகுத்தறிவும் ஒரு எச்சரிக்கை செய்து போக
நான் அதிகமாக என ஆச்சரியத்தை வெளிப்படுத்திக்
கொள்ளாது "ஆம் நீங்கள்  சொல்வது சரிதான் "
என மட்டும் சொல்லிவைத்தேன்

அவர் மிக லேசாகச் சிரித்தபடி " இது மட்டும் இல்லை
நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதி போல வெளியே
காட்டிக் கொள்வது கூட வெறும்
 நடிப்புத்தான் மாப்பிள்ளை
உண்மையில் நீங்கள் அப்படி இல்லை
உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்றார்

இந்த சமயத்தில் டிரைவர் அறைக்குள் வந்து சேர
எங்கள் உரையாடல் தடைபட்டுப் போனது

நாங்கள் அவர் அவர்களுக்கான உடமைகளை
எடுத்துக் கொண்டு திருமண மண்டபம் வந்து சேரவும்
"கெட்டிமேளம்...கெட்டிமேளம் " என
திருமண மேடையில் இருந்தவர்கள் குரல் கொடுக்க
அட்சதையையும் பூக்களையும் கைகளில் ஏந்தியபடி
அனைவரும் மேடை நோக்கி நகரவும் மிகச் சரியாக
இருந்தது

சோமு அந்தக் கூட்டத்தோடு மேடை நோக்கி நகர
நான் காலியாக இருந்த ஒரு இருக்கையில்
அமர்ந்து கொண்டேன்

"நீங்கள் உண்மையில்  பகுத்தறிவு வாதி இல்லை
உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்கிற வார்த்தை
மட்டும் மீண்டும் மீண்டும் என்னுள் ஒரு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது

காரணம்--
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
ஏறக்குறைய இதே வார்த்தையை  தீர்மானமாக
வேறு விதமாகச் சொன்ன எனது பெரியப்பாவின்
மறக்க முடியாத நினைவுகளும்,,,,
அந்த நிகழ்வுகளும்தான்

(தொடரும் )

26 comments:

  1. ஏற்கனவே வியப்பில் உள்ளோம்... இப்போது பெரியப்பா அவர்களுடன் நடந்த நிகழ்வை அறிய ஆவலுடன்...

    ReplyDelete
  2. தொடரும் வியப்புகள்.. பெரியப்பா என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்......

    ReplyDelete

  3. "நீங்கள் உண்மையில் பகுத்தறிவு வாதி இல்லை
    உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்கிற வார்த்தை
    மூடுபனியாக மர்மத்தை அதிகப்படுத்துகிறது..!

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு இது மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  5. சிறுகதை தொடர்கிறது என்றால் மர்மமும் தொடர்ந்த வண்ணமே உள்ளதே அருமை வாழ்த்துக்கள்......!

    ReplyDelete
  6. திறந்த வாய் மூடாமல் அல்லது அல்லது
    திறந்த கண் மூடாமல் 5 மூடுபனியும் வாசித்தேன்.

    பின்னரும் தொடருவேன். திகில், மர்மம் !!!!!!...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. ஆச்சர்யம்தான்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. வியப்பின் உச்சகட்டம்... பெரியப்பா என்ன சொன்னாரோ?

    மொத்த பகுதிகளையும் படித்து விட்டு வந்தேன். இந்திரா செளந்தர்ராஜன் கதைகள் படித்தது போன்ற உணர்வைத் தந்தது.

    தொடர்கிறேன் சார். த.ம +1

    ReplyDelete
  9. கதைக்குள் கதை.....? தொடர்கிறேன்

    ReplyDelete
  10. நானும் தொடர்கிறேன்!

    ReplyDelete
  11. அதுதானே ,பிளாஷ்பேக் இல்லாமல் கதையா ?
    அசத்துங்க சார் !
    த ம +1

    ReplyDelete
  12. பெரியப்பாவும் கதைக்குள் வந்துவிட்டாரா.
    கதைக்குள் கதை
    வியப்பின்மேல் வியப்பு
    தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  13. பெரியப்பாவும் கதைக்குள் வந்துவிட்டாரா.
    கதைக்குள் கதை
    வியப்பின்மேல் வியப்பு
    தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஃப்ளாஷ்பாக் வருகிறது என்றால் ஏதோவொரு ட்விஸ்டும் இருக்குமோ? என்று தோன்ற வைத்துள்ளது! ஆவலுடன் காத்திருக்கின்றோம்!

    த.ம.

    ReplyDelete
  16. இதுவரை சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது... தொடருங்கள்... ஆவலுடன் இருக்கிறேன்....

    ReplyDelete
  17. மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றீ!

    ReplyDelete
  18. "நீங்கள் உண்மையில் பகுத்தறிவு வாதி இல்லை
    உங்கள் ஜாதக அமைப்பு அப்படி//உண்மைதானே

    ReplyDelete
  19. 'ஹிப்னாடிசத் தூக்கத்தில் ' என்றும் உளவியல் இணையத் தொடர் நன்றே நகருகிறது.
    மேலும், தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  20. //நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதி போல வெளியே
    காட்டிக் கொள்வது கூட வெறும்
    நடிப்புத்தான் மாப்பிள்ளை
    உண்மையில் நீங்கள் அப்படி இல்லை//
    இது நிறையப் பேருக்கு பொருந்தும்

    ReplyDelete
  21. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
    ஏறக்குறைய இதே வார்த்தையை தீர்மானமாக
    வேறு விதமாகச் சொன்ன எனது பெரியப்பாவின்
    மறக்க முடியாத நினைவுகளும்,,,,
    அந்த நிகழ்வுகளும்தான்//

    வியக்க வைக்கும் உண்மைகள் ஆவல் அதிகமாகிறது.மூடுபனி எப்போது விலகும்?

    ReplyDelete
  22. விறுவிறுப்பு குறையாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ... மூடுபனி மெல்ல விலகுவதாக தெரிந்தாலும் மறுபடி தொடர்கிறது.

    ReplyDelete
  23. ஆச்சரியமான விஷயம்! மூடுபனி என்று தலைப்பில் ஏன் வைத்தீர்கள் என்று இப்போதுதான் புரிகிறது.

    ReplyDelete
  24. ஹை ரமணிசார் அப்ப நீங்க பகுத்தறிவு வாதி இல்லையா?? என்னைப்போல் தானா நீங்கள்? சோமு உங்கள் மனதில் இருப்பதை பட் பட் என்று சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது...இவர் சொன்னதையே பெரியப்பா வேறு விதமாக 20 வருஷத்துக்கு முன்னாடி அப்படி என்ன தான் சொன்னார்.. என்ன ரமணி சார் இப்படி தொடர் சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே.... த.ம.13

    ReplyDelete