Tuesday, March 11, 2014

நிமிர்ந்து நில்--பட விமர்சனம்

நான் திரைப்பட விமர்சனம் எழுதியதில்லை
அதிக எதிர்பார்ப்புடன் போய் படம் வெளியானவுடன்
போய்ப் பார்த்த படம் என்பதால் எழுதலாமோ
எனத் தோன்றியது

படம் ஆரம்பித்ததும் மிக மிக வேகமாக வருடங்களைக்
கடக்கத் துவங்கியதும் இந்த இயக்குநர்  சொல்வதற்கு
நிறைய விஷயம் வைத்திருக்கிறார் அதுதான் இந்தத்
தாவு தாவுகிறார் என நம்மை முதலில்
 எண்ணவைக்கிறார்

பின் நிகழ்காலத்திற்க்கு வந்ததும் கயிறு பிடித்து
ஒவ்வொரு அடியாக மலையேறுவதுபோல்
மிக நிதானமாக ஒவ்வொரு நிகழ்வாக அதுவும்
ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் தொடர்ச்சியாகவேத்
 தொடர்வதால்கொஞ்சம் அலுப்பூட்டினாலும்
 சமூக அவலம் குறித்த யதார்த்த நிலையைச்
சொல்லிப்போகும் வசனங்கள்
நம்மை இடைவேளை வரை நன்றாக நிமிர்ந்து
உட்காரவைத்துவிடுகிறது.

அதுவும் எம். ஆர் ராதா
மணிவண்ணன் வாரிசு போல பரோட்டா சூரி
உடல் மொழி மற்றும் அழுத்தமான வசன
உச்சரிப்பின் மூலம்சமூக அவலங்களை
வெளிப்படுத்திய விதம்
மிக மிகப் பிரமாதமாக அமைந்துவிடுவதால்
இடைவேளையில் அனைவரும்   ஒரு
நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற
திருப்தியைதங்கள் மனம் திறந்த
வாய் விமர்சனம் மூலமே தெரிந்து
கொள்ளமுடிந்தது.

 இடைவேளைக்குப் பின்னே இதற்கு நேர்மாறாக
கதையை மசாலக் கலந்து சொல்ல முயற்சிப்பது
படத்தை திரிசங்கு  நிலையில் நிறுத்திவிடுகிறது

ஒரு சமூகக் கண்ணோட்டமுள்ள இயக்குநரும்
லாப நோக்கமுள்ள தயாரிப்பாளரும் இணைந்து
ஒருமுழுப் படம் எடுத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்

ஆனால் ஒரு சமூக நோக்கமுள்ள  இயக்குநர்
லாப நோக்கத் தயாரிப்பாளரிடம் இடைவேளை வரை
முழுமையாக நான் எடுத்துக் கொடுத்துவிடுகிறேன்,
நீங்கள் எதிலும்தலையிடவேண்டாம் எனவும்

அதைப் போல  லாப நோக்கத் தயாரிப்பாளர்
சமூக நோக்கமுள்ள இயக்குநரிடம் முன்பாதியை
எப்படியும் எடுத்துக் கொள்ளுங்கள் அது எனக்குப்
பிரச்சனையில்லை.
பின் பாதியில் நீங்கள்தலையிட்டுத்
தொலைக்கவேண்டாம் எனவும்

பேசிப் படம் எடுத்தால் எப்படி இருக்கும்
என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்

மொத்தத்தில்

இப்படத்தின் முன்பாதி கூனனையும் நிமிரவைக்கும்
பின் பாதி இளைஞனையும் கூனனாக்கிவிடும்

24 comments:

  1. ஹீரோயினைப் பற்றி சொல்லாமல் ,ஒரு கவர்ச்சிப் படத்தைப் போடாமல் ...இதென்ன சினிமா விமர்சனம் ?இந்த விஷயத்தில் நீங்க ரொம்ப தூரம் முன்னேற வேண்டியிருக்கே !
    த ம 1

    ReplyDelete
  2. வணக்கம
    ஐயா.

    விமர்சனத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது....தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  3. புதிய முயற்சி மென்மேலும் சிறந்து விளங்கவும் தொடரவும் வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  4. சிறந்த அறிமுகம்
    "இப்படத்தின் முன்பாதி கூனனையும் நிமிரவைக்கும்
    பின் பாதி இளைஞனையும் கூனனாக்கிவிடும்" என
    நல்ல திறனாய்வைப் பகிர்ந்துள்ளீர்.
    சிறந்த பதிவு

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம் ஐயா

    ReplyDelete
  6. உங்கள் தளத்தில் சினிமா விமர்சனம். அட! வரவேற்கிறேன். அது சரி, மதுரையில் எந்தத் திரையரங்கில் பார்த்தீர்கள்? (சும்மா ஒரு ஆர்வந்தேன்....!)

    ReplyDelete
  7. ஸ்ரீராம். //

    திருநகர் கலைவாணியில்தான் பார்த்தேன்
    படம் சமயத்தில் கொத்தாக அமைந்தாலும்
    ஏ.சி.கொஞ்சம் ஒழுங்காகப் போடுவார்கள்
    எனக்கு நண்பர்களும் அந்தப் பகுதியில்
    கொஞ்சம் அதிகம்.அதனால்தான் கலைவாணி
    வாழ்த்துக்களுடன்......

    ReplyDelete
  8. ஐயா... சினிமா விமர்சனம் செய்வதிலும் அசத்தி விட்டீர்கள்... பிடித்த படங்களை இது போல் தொடருங்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
    இந்த வாரம் தான் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  9. தங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html

    ReplyDelete
  10. விமர்சன உலகத்தின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்து வெளியிட்ட முதல் திரை விமர்சனத்துக்குப் பாராட்டுகள். எதைச் சொல்ல நினைத்தீர்களோ அதை மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. நீங்கள் தொடாத பகுதி திரை விமர்சனம் . உங்கள் பானியில் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
    கடைசி பஞ்ச் அருமை

    ReplyDelete
  12. விமர்சனத்தை கவிதையா சொல்லியிருப்பீங்கன்னு ஓடோடி வந்து பார்த்த என்னை ஏமாத்தீட்டீங்களே ஐயா..

    ReplyDelete
  13. #அந்தத் திரையரங்கில்
    வெளியாகும் படம் எதுவும் சரியிருக்காது
    ஆயினும் என்ன செய்வது
    இருக்கை மற்றும் குளிசாதன அமைப்பும்
    அங்குதான் சிறப்பாக இருக்கிறது
    எனவே அங்குதான் படம்பார்க்கிறோம்#
    #திருநகர் கலைவாணியில்தான் பார்த்தேன்
    படம் சமயத்தில் கொத்தாக அமைந்தாலும்
    ஏ.சி.கொஞ்சம் ஒழுங்காகப் போடுவார்கள்#
    அனுபவத்தை முன்பே கவிதையில் சொன்னது நினைவுக்கு வந்தது !

    ReplyDelete
  14. யார் தயாரிப்பு யார் இயக்கமென்று சொல்லி இருக்கலாம். சில நாட்களுக்கு முன் இயக்குனர் சமுத்திரக் கனியா? தற்கொலை முயற்சியா என்றுஏதோ வலைத்தளத்தில் படித்த நினைவு.

    ReplyDelete
  15. சுருக்கமான வித்தியாசமான அருமையான விமரிசனம் என்று இந்த விமரிசனத்தை விமர்சிக்கலாம்.

    ReplyDelete
  16. விமர்சனம் நிமிர்ந்து நிற்கிறது!

    ReplyDelete
  17. கடைசி வரிகள் நல்ல பஞ்ச்! அருமையான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  18. சமுத்திரக்கனி படம் பார்க்கலாம்னு இருந்தேன்.பின் பாதி சரியில்லை போலவே!
    சினிமா விமர்சனத்தையும் விட்டு வைக்கலையா ?
    நீங்க இன்னொரு சுப்புடு சார்!!

    ReplyDelete
  19. Arumaiyana vimarsanam. Kadaisi punch super sir. Valthukkal.

    ReplyDelete
  20. படம் சரியில்லையா? ஒரு சில தளங்களில் அருமை என்று கூறி இருந்தார்களே? பார்க்கலாமா? வேணாமா?

    ஆனால், உங்களது அருமையான விமர்சனத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    ReplyDelete
  21. சிறப்பான விமர்சனம்.... கடைசி பஞ்ச் லைன் அருமை!

    த.ம. +1

    ReplyDelete
  22. அருமையான விமர்சனம்! ஆனால் தங்களின் விமர்சனம் வித்தியாசமாக உள்ளது பலர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்!

    பகிர்வுக்கு நன்றி!

    த.ம.

    ReplyDelete
  23. ஆஹா விமர்சனத்திலும் இனி அசத்தலாக இருக்கப் போகிறதே! சரி சரி அசத்துங்க! மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  24. சரியான விமரிசனம். படத்தின் இடைவேளைக்குப் பிறகு ஆரம்பத்தில் எடுத்த வேகம் தடைபடுவது தெரிந்தாலும், மக்களுக்கு செய்தி சென்றடைகிறது என்பது என் கருத்து. அதில் சமுத்திரகனி வெற்றியடைகிறார்.

    ReplyDelete