Wednesday, March 5, 2014

கவிஞனாய் ஜொலிக்க....

புரிந்ததை புரியாதபடியும்
புரியாததை புரியும்படியும்
அறிந்ததை அறியாதபடியும்
அறியாததை அறிந்தபடியும
உணர்ந்ததை உணராதபடியும்
உணராததை உணர்ந்தபடியும்
சொல்லப் பழகு அது போதும்
நீ ஞானியாகத் தெரியக் கூடும்

இருக்கையில் இல்லாததுபோலும்
இல்லாதபோது இருப்பதுபோலும்
இழக்கையில் கிடைத்ததுபோலும்
கிடைக்கையில் இழந்ததுபோலும்
செல்வந்தரெல்லாம் உறவுபோலும்
உறவெல்லாம் செல்வந்தர்போலும்
நடிக்கப் பழகு அது போதும்
நீ செல்வந்தனாய் நிலைக்கக் கூடும்

இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெளிவானதை குழப்பத்துடனும்
குழப்பத்தைத் தெளிவுடனும்
எதிர்மறையை  நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்

26 comments:

  1. சிறந்த ஒப்பீடு
    எழுதுகோல் ஏந்தியோர்
    சிறகு விரித்துப் பறக்க
    சிறந்த வழிகாட்டல்!

    ReplyDelete
  2. நல்ல ஒப்பீட்டுக்கவிதை, நன்றாக உள்ளது, keep it up

    ReplyDelete
  3. சிறப்பா சொல்லியிருக்கீங்க! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அழகான நையாண்டிக் கவிதை! எவ்வளவு பேருக்குப் புரியும்?

    ReplyDelete
  5. எவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள்...!

    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  6. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    நன்றி ஐயா...

    ReplyDelete
  7. ஆஹா...போட்டு உடைச்சிட்டீங்களே அய்யா...அருமை...

    ReplyDelete
  8. நாடகமேடை நடிகர்கள்!

    ReplyDelete
  9. எழுதுகோல் மட்டுமே கையில் இருந்தால் அவன் கவிஞன் ஆக மாட்டான் என்பதனைச் சொல்லாமல் சொல்லிய கவிஞருக்கு பாராட்டு!

    ReplyDelete
  10. எதிர்மறையை நேர்மறையுடன்
    நேர்மறையை எதிர்மறையுடன்
    ஒப்பிடப் பழகு அது போதும்
    நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்....அருமை

    ReplyDelete
  11. மிகச் சிறந்த நையாண்டி :))) .வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  12. கலக்கிட்டீங்க சார்! அபாரம்!

    ReplyDelete
  13. ஓ.... கவிஞனாக ஜொலிக்க இவ்வளவு இருக்கா....!!!!

    இனி இப்படியெல்லாம் முயற்சித்துப் பார்க்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  14. ஆகா
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  15. நறுக், நச், நக்கல்ஸ்!!! கலக்கல்ஸ்!!!! அருமையான கவிதை!
    எதிர்மறையை நேர்மறையுடன்
    நேர்மறையை எதிர்மறையுடன்
    ஒப்பிடப் பழகு அது போதும்
    நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//

    ரசித்தோம்!

    த.ம.

    உங்களை வலைப்பக்கம் பார்க்க முடியவில்லையே!

    ReplyDelete
  16. ஞானி, செல்வந்தன், கவிஞன் ஒப்பீடு அருமை. பாராட்டுவது போல கிண்டலா? கிண்டலடிப்பதுபோல பாராட்டா? எப்படியோ வித்தியாசமான ஒப்பீடு.

    ReplyDelete
  17. நல்ல கற்பனை !
    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  18. ரகசியங்களை இப்படியா போட்டு உடைப்பது???

    ReplyDelete
  19. பிறர் மண்டையில் இருப்பதை இல்லாத மாதிரியும் .தன் மண்டையில் இல்லாததை இருக்கிற மாதிரியும் காட்டி அரசியல்வாதிகள் ஜொலிப்பதை போலத்தானே இதுவும் ?
    த ம 13

    ReplyDelete
  20. கவிதைக்குப் பொய் அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //இருப்பதை இல்லாததுடனும்
    இல்லாததை இருப்பதுடனும்
    தெளிவானதை குழப்பத்துடனும்
    குழப்பத்தைத் தெளிவுடனும்
    எதிர்மறையை நேர்மறையுடன்
    நேர்மறையை எதிர்மறையுடன்
    ஒப்பிடப் பழகு அது போதும்
    நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//
    அருமை ஐயா! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  22. இது நல்ல வழிகாட்டலாக இருக்கே!
    அருமை அய்யா !

    ReplyDelete
  23. //இருப்பதை இல்லாததுடனும்
    இல்லாததை இருப்பதுடனும்
    தெளிவானதை குழப்பத்துடனும்
    குழப்பத்தைத் தெளிவுடனும்
    எதிர்மறையை நேர்மறையுடன்
    நேர்மறையை எதிர்மறையுடன்
    ஒப்பிடப் பழகு அது போதும்
    நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//

    :))))

    நல்ல கவிதை. த.ம. +1

    ReplyDelete
  24. .ரசனையான கவிதை.

    ReplyDelete
  25. //இழக்கையில் கிடைத்ததுபோலும்
    கிடைக்கையில் இழந்ததுபோலும்///

    ரசித்தேன். சிந்தனைக்குரியது.

    ReplyDelete