Wednesday, May 14, 2014

விட்டில் பூச்சிகள்

இம்முறை நான் சென்னை மற்றும் பெங்களூர் சென்று
திரும்புகையில் எனது சீட்டை அடுத்து
நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவரும்
அவருடைய மகனும் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.

வழக்கம்போல பெயர் மற்றும் ஊர் விசாரிப்புக்குப் பின்
அவருடைய பையன் குறித்த பேச்சு வந்தது

அவருடைய மகன் தற்போதுதான்
பிளஸ் 2 முடித்துள்ளதாகவும் இந்த முறை
பொறியியல் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பம்
வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்

அது குறித்து எனது மகிழ்ச்சியைப் பகிர்வு
செய்து கொண்டபின் அந்தப் பையன் எடுத்த
மதிப்பெண்  குறித்துக் கேட்க அவன் தன்னுடைய
கட்-ஆஃப் மதிப்பெண் 150 எனச் சொல்ல
எனது மகிழ்ச்சி கொஞ்சம் ஆட்டம் காணத் துவங்கியது

அடுத்து அவன் எந்தப் பிரிவை எடுத்துப் படிக்க
விரும்புகிறான் எனக் கேட்ட போது
மெரைன்,அல்லதுஏரோ நாட்டிகல் எனச் சொன்னான்

இந்த பிரிவுகளின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது
எனக் கேட்க தனது நண்பர்கள் சொன்னார்கள்
எனச் சொன்னான்

சென்றமுறை இந்தப் பாடப் பிரிவுகள்
 உள்ள கல்லூரிகள் அதற்கான கட் ஆஃப்
எல்லாவற்றையும் அவனுக்கு எடுத்துக் கூறி
கலந்தாய்வு மூலம் அது கிடைப்பதற்கான வாய்ப்பு
எவ்வளவுகுறைவு என எடுத்துக் கூற அந்தப் பையன்
 சிறிதும்சங்கடப்படாமல்
 "அதற்காகத்தான் நாங்கள் நிர்வாகக்
கோட்டாவில் கேட்டிருக்கிறோம்.
தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் "என்றான்

"அதற்கு அதிகம் செலவாகுமே  " என்றேன்

"ஆம் விசாரித்து விட்டோம்.நான்கு ஆண்டுகளுக்கு
மொத்தம்பன்னிரண்டு லட்சங்கள்தான் ஆகும் "
என்றான்

அந்தப் பையனின் அப்பாவும் "நீங்கள் பூனே
போயிருக்கிறீர்களா ?அங்கு தான் துலானி என்கிற
கல்லூரியில் சேர்க்க இருக்கிறோம்.பூனே ஊர் எப்படி ?
என விசாரிக்கத் துவங்கினார்

நான் அங்கு என் தங்கை இருப்பதால் அங்கு போய்
வந்து இருப்பதால் அந்த ஊர் விவரம் எல்லாம் சொல்லி
"பிலானி கல்லூரி கேள்விபட்டிருக்கிறேன்.
அது என்ன துலானி "என்றேன்

"அதுவும் பிலானி கல்லூரியைச் சேர்ந்த கல்லூரிதான்
விசாரித்துவிட்டோம்,"என்றான் அந்தப் பையன் தெளிவாக

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவர்கள்
இருவரையும்பார்க்கும்போதே நிச்சயம் அவர்கள்
சராசரி வருமானப் பிரிவைச்சேர்ந்தவர்கள் என்பது
தெளிவாகத் தெரிந்ததுஅவர்கள் எப்படி இப்படி
 அகலக்கால் வைக்கிறார்கள் எனவும்
ஆச்சரியமாக இருந்தது

சரி இதற்கு மேல் இது குறித்து இவர்களிடம்
பேசுவதில்பயனில்லை.என நான் அடுத்து
தேர்தல் முடிவுகள் குறித்து
பேசத் துவங்கினேன்.அவர்களும் சந்தோசமாக
அவர்கள் தொகுதி குறித்த விவரங்களை
விளக்கத் துவங்கினர்

அது சமயம் அந்தப் பையனின் அப்பாவுக்கு ஒரு
போன் கால் வந்தது.அவர் பேசிய விவரம்
....................................................

"ஆம் சார் நாங்கள்தான் ஆன் லைனில் லோனுக்கு
அப்ளை செய்திருந்தோம்

-------------------------------------------\

"நான் பிரைவேட் கம்பெனியில் வேலைபார்க்கிறேன் சார்
மாதச் சம்பளம் பதிமூன்றாயிரம் சார்
ஒயிப்பும் பிரைவேட்டில்தான் ஆறாயிரம் வாங்குகிறார் சார்

-------------------------------------------------

"வீடு வாடகை வீடுதான் சார்.ஆனா திருச்சியில
இரண்டு இடம் இருக்கு சார்.ஐந்து லட்சம் போகும் சார்


------------------------------------------------------------

'சரி சார் அந்த டாக்குமெண்ட்டோட வேற எது எது சார்
கொண்டு வரணும்..


---------------------------------------------------

"அவசியம் அடுத்த வாரம் நேரடியா பேங்குக்கு வாறோம்
சார்.ரொம்ப தாங்க்ஸ் சார்."

அவர் பேசிமுடித்ததும் "லோனுக்கு ஆன் லைனிலேயே
விண்ணப்பிக்க முடிகிறதா ? எந்த பேங்க் "என்றேன்

ஒரு பிரவேட் பேங்கின் பெயரைச் சொன்னார்

அதீத வெளிச்சத்தால் கவரப்பட்டு ஆசைப்பட்டு
தன் சக்தியறியாது மோதிச் சாக ஒரு விட்டில்பூச்சி
என்னைக் கடந்து விளக்கு நோக்கி  பறந்து கொண்டிருந்தது

31 comments:

  1. சரியாக, மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. எனது நெருங்கிய நண்பர் ஒருவரும் இவ்வாறே செய்து இன்று அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கின்றார். தன் நிலை அறிந்து செயல் படுதல் அவசியம் என்பதனை உணர்ந்திருந்தாலும், சட்டத்தை மீறி சாலையை கடக்கும் பயணியின் அவசரம் தான் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

    உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்கின்றனரே என்கின்ற ஆதங்கம் எழத் தான் செய்கின்றது.

    ReplyDelete
  3. என்ன பொருத்தமான தலைப்பு!
    அகலக் கால் வைக்க வேண்டாம் என்று சோழியும் கேட்காதவர்களை என்ன செய்வது.பட்டுத்தான் தெளிய வேண்டும்.

    ReplyDelete
  4. இந்த விட்டில் பூச்சிகளின் தேடலும் தேவையும் குறையப்போவதில்லை. இந்த அவலமும் தீரப் போவதில்லை.

    ReplyDelete
  5. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் படிப்பதற்கு அவர்கள் சொல்லும் "விலை" மிகக் குறைவாகத் தெரிகிறது. எனக்கென்னவோ படிப்பில் சேர்ந்ததும் இன்னும் கரப்பார்களோ என்று தோன்றுகிறது....

    ReplyDelete
  6. வழி தெரியாப் பறவைகள்!
    வழிகாட்டி இல்லாத பயணிகள்!
    கொம்பில் படராக் கொடிகள்!
    வருந்துவதைத் தவிர வழியில்லை!

    ReplyDelete
  7. //அதீத வெளிச்சத்தால் கவரப்பட்டு ஆசைப்பட்டு
    தன் சக்தியறியாது மோதிச் சாக ஒரு விட்டில்பூச்சி
    என்னைக் கடந்து விளக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். விட்டில் பூச்சியின் கதையே தான்.

    செலவழிக்கப்போகும் இந்தப்பணத்தை வங்கியில் போட்டாலாவது மாதம் ரூபாய் 10000 கிடைக்கும்.

    உருப்படியாக வேறு ஏதாவது தொழில் துவங்கினால் மாதம் ரூபாய் 20000 கிடைக்கும்.

    இவர்களோ இருக்கும் இடத்தையே அடமானம் வைத்து கடன் வாங்கப்போகிறார்கள்.

    என்னத்தைச்சொல்ல ! பாவம் அவர்கள் !!

    ReplyDelete
  8. அதீத வெளிச்சத்தால் கவரப்பட்டு ஆசைப்பட்டு
    தன் சக்தியறியாது மோதிச் சாக ஒரு விட்டில்பூச்சி
    என்னைக் கடந்து விளக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது - aasai...aasai.....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா

    அதீத ஆசையின் வெளிப்பாடு என்றுதான்சொல்லவேண்டும்...மிக அருமையாக கேள்விக்கனைகளை தொடுத்து..பதிவை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...ஐயா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  10. படிப்பு என்பதே வணிகமயமாகிவிட்ட இன்று, பெற்றோர்களின் அதீத ஆசை, அவர்களை அகலக்கால் வைக்கத் தூண்டுகிறது, சில ஆண்டுகள் கடந்தபின், படித்தப் படிப்பிற்கு வேலையும் கிடைக்காமல், கடனைவும் அடைக்க வழியில்லாமல், உண்மையிலேயே விட்டில் பூச்சிகள்தான்

    ReplyDelete
  11. அவர்களை நினைத்து வருத்தப் படுகிறேன்...

    ReplyDelete
  12. ITHUVUM ORU VAKAIYANA ATTERACTION ADVISE SAITHU

    THERUVIL SELLUM POOCHIYAI THALYIL VAITHU KOLLAKOODATHU

    ReplyDelete
  13. விரலுக்கேற்ற வீக்கம் என்று சும்மாவா சொன்னார்கள்?

    ReplyDelete
  14. இவர்களைப் போன்ற விட்டில் பூச்சிகளை எண்ணி எண்ணி வேதனை தான்
    கொள்ள முடியும் ஐயா .சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete

  15. அதீத வெளிச்சத்தால் கவரப்பட்டு ஆசைப்பட்டு
    தன் சக்தியறியாது மோதிச் சாக ஒரு விட்டில்பூச்சி
    என்னைக் கடந்து விளக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது

    சரியான கருத்து! ஆனால் ,நடுத்தர குடும்பங்கள் உணராமல் போய்கொண்டிருக்கின்றன!

    ReplyDelete
  16. உண்மைதான்! உண்மையை அவர்கள் உணர்வார்களா? நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு! நன்றி!

    ReplyDelete
  17. இந்த விட்டில் பூச்சிகளுக்கு எடுத்துக்கூறினாலும் புரிய வருவதில்லை! பரிதாபப்படவே முடியும்! நன்றி!

    ReplyDelete
  18. தங்கள் பிள்ளைகள் எது கேட்டாலும் செய்யத் துடிக்கும் பாவப் பட்ட பெற்றோர். பிள்ளைகளுக்கு உழைப்பின் தாக்கமோ. பணத்தின் அருமையோ தெரிவதில்லை. நம் நாட்டில் கல்வித் துறையில் பெரிய மாற்றம் தேவைமக்களின் மனோபாவத்தில்கூட.

    ReplyDelete
  19. தன் பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் சில சமயம் சிலருக்கு கண்களை மறைக்கத்ததான் செய்கிறது.
    என்ன செய்வது?

    ReplyDelete
  20. தெரிந்தே நெருப்பில் விழுந்து மாயும் விட்டில்கள். மனிதனுக்கு இயற்கை உணர்த்தும் பாடம். இன்னும் இதுபோன்ற விட்டில் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உங்கள் கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    ReplyDelete
  21. படிக்கும்போதே மனது பதறுகிறதே! யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்லுவது?

    ReplyDelete
  22. அகல கால் வைத்து பின்னர் ஆயுள்முழுக்க அவதிப்பட்டு...பாவம். சொல்லியும் திருந்தவில்லை என்றால் விதிவிட்ட வழி தான்.அருமையான விழிப்புணர்வு பகிற்விற்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  23. விட்டில் பூச்சிக்கள் பாவம் தான் ஐயா! பாவம் அவர் பையனும் உலகு அறியாதவனா!ம்ம்

    ReplyDelete
  24. உண்மையானக் கருத்தை அருமையானத் தலைப்புடன் சொல்லி இருக்கிறீர்கள் இரமணி ஐயா.

    ReplyDelete
  25. விட்டில் பூச்சிகள் - நல்ல தலைப்பு.

    படிக்கும்போதே எனக்குள்ளும் ஆதங்கம்....

    ReplyDelete
  26. இப்படியானவர்களுக்கு அனுபவம்தான் பாடம். ஆனால் இந்தப்பதிவு ஆழச் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஆதரவு தரும்.

    ReplyDelete
  27. இப்பதிவு பலருக்கு பாடமாக அமையவேண்டும். இவ்வாறான மாயைகளிலிருந்து நடுத்தர வர்க்கம் எப்போது விடுபடுமோ? நினைககவே வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  28. அதீத வெளிச்சத்தால் கவரப்பட்டு ஆசைப்பட்டு
    தன் சக்தியறியாது மோதிச் சாக ஒரு விட்டில்பூச்சி
    என்னைக் கடந்து விளக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது//
    உண்மை.
    ஏன் இப்படி போய் விழுகிறார்கள் என்று வருத்தமாய் இருக்கிறது.

    ReplyDelete