பதிவர் என்றொரு இனமுண்டு
தனியே அவர்கொருத் திறனுண்டு
கணினியே கதியெனக் இடந்தாலும் -கழுகின்
விரிந்த பார்வை தனைக்கொண்டு (பதிவர் )
அழகை கண்டால் மனம்மகிழ்ந்து-அதனைப்
பதிவாய் பகிர உடன்முயலும்
அவலம் கண்டால் கொதித்தெழுந்து-அதனை
உலகம் அறிய உடன்பகிரும் (பதிவர் )
சங்கக் கால இலக்கியமா
சினிமா, சமையல், உடல்நலமா
அந்தத் அந்தத் துறைகளிலே-முழுமை
திறமைக் கொண்டுத் திகழ்கின்ற (பதிவர் )
மொக்கை போடும் இளையோரும்
முதிர்ச்சி கொண்ட முதியோரும்
சித்தம் தன்னில் பேதமின்றி-ஒன்றாய்
சேர்ந்து மகிழும் குணம்கொண்டு (பதிவர் )
எழுத்தின் தரத்தை உயர்த்திடவும்
இனிய உறவை வளர்த்திடவும்
வருடம் ஒருமுறை சந்தித்து-தங்கள்
இனத்தின் உயர்வைச் சிந்திக்கும் (பதிவர் )
எல்லைக் கடந்து இருந்தாலும்
எண்ணம் வேறாய் இருந்தாலும்
இல்லை எமக்குள் பேதமென்று-தொடர்ந்து
உறவாய் எண்ணி வாழுகின்ற (பதிவர் )
-------
அந்த இனத்தில் ஒருவனாக
தொடர்ந்து இருக்க முயல்வோமே
அந்த உறவின் அருமையினை -என்றும்
தொடர்ந்து ரசித்து மகிழ்வோமே
தனியே அவர்கொருத் திறனுண்டு
கணினியே கதியெனக் இடந்தாலும் -கழுகின்
விரிந்த பார்வை தனைக்கொண்டு (பதிவர் )
அழகை கண்டால் மனம்மகிழ்ந்து-அதனைப்
பதிவாய் பகிர உடன்முயலும்
அவலம் கண்டால் கொதித்தெழுந்து-அதனை
உலகம் அறிய உடன்பகிரும் (பதிவர் )
சங்கக் கால இலக்கியமா
சினிமா, சமையல், உடல்நலமா
அந்தத் அந்தத் துறைகளிலே-முழுமை
திறமைக் கொண்டுத் திகழ்கின்ற (பதிவர் )
மொக்கை போடும் இளையோரும்
முதிர்ச்சி கொண்ட முதியோரும்
சித்தம் தன்னில் பேதமின்றி-ஒன்றாய்
சேர்ந்து மகிழும் குணம்கொண்டு (பதிவர் )
எழுத்தின் தரத்தை உயர்த்திடவும்
இனிய உறவை வளர்த்திடவும்
வருடம் ஒருமுறை சந்தித்து-தங்கள்
இனத்தின் உயர்வைச் சிந்திக்கும் (பதிவர் )
எல்லைக் கடந்து இருந்தாலும்
எண்ணம் வேறாய் இருந்தாலும்
இல்லை எமக்குள் பேதமென்று-தொடர்ந்து
உறவாய் எண்ணி வாழுகின்ற (பதிவர் )
-------
அந்த இனத்தில் ஒருவனாக
தொடர்ந்து இருக்க முயல்வோமே
அந்த உறவின் அருமையினை -என்றும்
தொடர்ந்து ரசித்து மகிழ்வோமே
பதிவர் இனத்தைப் பற்றிய கவிதை அருமை ரமணி சார்.
ReplyDeleteபதிவர் 'இனம்' உங்கள் பாட்டால் மகிழ்கின்றது அண்ணே! ஒற்றுமை வளர்ப்போம்! இந்த ஆண்டும் ஒரு மாநாடு காண்போம்! ....(மதுரையில்தானே..)
ReplyDeleteபதிவர் பற்றிய பாடல் அருமையாய் உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
சந்தமும் சீரும் வரிக்கு வரி ஒலிக்குது பாடலில் நானும் பாடி இரசித்தேன்
''..அழகை கண்டால் மனம்மகிழ்ந்து-அதனைப்
ReplyDeleteபதிவாய் பகிர உடன்முயலும்
அவலம் கண்டால் கொதித்தெழுந்து-அதனை
உலகம் அறிய உடன்பகிரும்...''' உண்மை தான் ஐயா
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
பதிவர் என்ற முறையில் நானும் சிரம் தாழ்த்துகிறேன் தங்கள் கவி வரிகளுக்கு... மிக அருமை..
ReplyDelete!!!!!!! க்ரேட்!
ReplyDeleteஅந்த இனத்தில் ஒருவனாக
ReplyDeleteதொடர்ந்து இருக்க முயல்வோமே
அந்த உறவின் அருமையினை -என்றும்
தொடர்ந்து ரசித்து மகிழ்வோமே ....
தொடர்ந்து ரசித்து மகிழ்வோம் இரமணி ஐயா.
மகிழ்வோம். நேற்றைய 'தி இந்து' தமிழ் பேப்பரில் ட்விட்டர், முகநூல் ஆகியவையில் ஆழ்ந்து குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தி இருந்தார்கள்!
ReplyDeleteஸ்ரீராம். //
ReplyDeleteபதிவர்கள் அந்தக் கணக்கில்
வரமாட்டார்கள் என நினைக்கிறேன்
பதிவர் மனங்களைப் பக்குவப்படுத்த உதவும் பயனுள்ள கவிதை.
ReplyDeleteமகிழ்ச்சி; நன்றி.
ம் ...
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteஅருமை... வணக்கங்கள் ஐயா...
ReplyDeleteபதிவர் குலத்தைப்பற்றி
ReplyDeleteபாங்கான பகிர்வுகள்...
பாராட்டுக்கள்.!
வணக்கம் ஐயா!!எமக்கென ஒரு பாடல்.அருமை
ReplyDeleteமொக்கை போடும் இளையோரும்
முதிர்ச்சி கொண்ட முதியோரும்
சித்தம் தன்னில் பேதமின்றி-ஒன்றாய்
சேர்ந்து மகிழும் குணம்கொண்டு ஃஃஃஃஃ
எல்லைக் கடந்து இருந்தாலும்
ReplyDeleteஎண்ணம் வேறாய் இருந்தாலும்
இல்லை எமக்குள் பேதமென்று-தொடர்ந்து
உறவாய் எண்ணி வாழுகின்ற (பதிவர் )
அந்த இனத்தில் ஒருவனாக
தொடர்ந்து இருக்க முயல்வோமே
அந்த உறவின் அருமையினை -என்றும்
தொடர்ந்து ரசித்து மகிழ்வோமே
அருமையாகச் சொல்லி விட்டீர்கள் ரமணி ஐயா
இதை விட மகிழ்வான செய்தி என்னவிருக்கப் போகிறது எம் போன்றவர்களுக்கு வலைத்தளம் தந்த வலுவான இந்த உறவுகள் எம் வாழ்வில் மறக்க முடியாத பிரிக்க முடியாத சொந்தங்களே .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
உண்மை! உண்மை! உண்மை! கவிதை உரைத்தன
ReplyDeleteஅனைத்தும்!
பதிவர்கள் பலவிதம் அவர் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். முகம் தெரியாப் பதிவர்கள் முகமறிந்து விட்டால் தொடருமா நட்பும் மதிப்பும்.?ஏனோ இந்த சந்தேகம் ?
ReplyDeleteமிக அருமை ரமணி ஐயா..
ReplyDelete
ReplyDeleteG.M Balasubramaniam //
அதீதக் கற்பனையும்
கூடுதல் எதிர்பார்ப்பும் இன்றி
இயல்பாக எதிர்கொண்டால்
நிச்சயம் ஏமாற்றமளிக்காது என்பது
எண்ணம்
ஒரு பதிவரின் பார்வையில் பதிவர்கள்! நல்ல விளக்கம்.
ReplyDeleteத.ம.10
அருமையான கவிதை பதிவர்கள் பலவிதம்!
ReplyDeleteகவிதையில் பதிவர் பற்றி அழகுடன் கூறியுள்ளீர்கள். இயல்பான தமிழ் நடைக் கவிதை...அருமை
ReplyDelete--///அந்த இனத்தில் ஒருவனாக
ReplyDeleteதொடர்ந்து இருக்க முயல்வோமே///
தொடர்ந்து இருப்போம்
உறவினை வளர்ப்போம்
தம 12
ReplyDeleteசந்தன வாடையில் சிந்தனை நீரோடை.
ReplyDeleteசந்தன வாடையில் சிந்தனை நீரோடை.
ReplyDelete"சுவையான கருத்துக் கண்ணோட்டம்
ReplyDeleteசங்கக் கால இலக்கியமா
சினிமா, சமையல், உடல்நலமா
அந்தத் அந்தத் துறைகளிலே-முழுமை
திறமைக் கொண்டுத் திகழ்கின்ற (பதிவர் )
பதிவர் என்றொரு இனமுண்டு" என்ற
உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்!
சிறந்த பகிர்வு!
visit: http://ypvn.0hna.com/
ஆஹா! இதை நம் பதிவுலகின் குடும்ப பாட்டை செலக்ட் பண்ணலாம் போலவே!! அருமை!
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteதங்கள் பதிவு வழக்கம் போல் நன்றாக வெகு நேர்த்தியாக உள்ளது. எல்லா பதிவர்கள் மனதிலும் பதியும் வரிகள். உங்கள் கற்பனைத் திறனுக்கு இந்த புதிய பதிவரின் மனம் நிறைந்த நன்றிகள்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்
த.ம பதிமூன்று
ReplyDeletehttp://www.malartharu.org/2014/01/gold-vein.html
உங்கள் பதிவுலகம் அழகானது ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
http://www.malartharu.org/2014/01/gold-vein.html
பதிவுலகம் பற்றிய உங்கள் பாடல் அருமை......
ReplyDeleteஇந்த முறை மதுரையில் பதிவர் சந்திப்பு..... சந்திப்போம்....