Monday, June 16, 2014

தினம் நன்மை தடையின்றித் தொடர

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள்ளே என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாக கத்துக்கிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தத்திலே என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் கூடயானை அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவிட்டு
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

27 comments:

  1. போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    மனமதனை அடக்கிவிட்டு
    அறிவதனை வளர்தெடுத்தால்
    தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
    சங்கடமே தொடர்கதைபோல் வளரும்
    ஒவ்வொரு வரியிலும் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்

    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  4. மாடிமனை கோடியெனத்
    தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
    மனதுக்குள்ளே என்னமாற்றம் செய்யும் ? -அது
    இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

    போது மென்ற மனமோ இல்லை
    பொருளை சேர்க்க உண்டோ எல்லை
    தீதுதனை எண்ணுவாரா இங்கே-மேலும்
    தேடுவதை நிறுத்தி டுவார் எங்கே?

    ReplyDelete
  5. அறிவினை வளர்ப்போம்
    அருமை ஐயா அருமை
    தம 6

    ReplyDelete

  6. வணக்கம்!

    சந்தங்கள் துள்ளிவரத்
    தந்தகவி அத்தனையும்
    சொந்தங்கள் எனவாகி வாழும்! - நெஞ்சம்
    சுவைத்தெனின் இன்பத்தில் ஆழும்!

    ReplyDelete
  7. முதலில் அருமையான கவிதைக்குப் பிடியுங்கள் பாராட்டு. ...! சங்கடங்களுக்குக் காரணம் மன்மதனை அடக்காத்து மட்டுமா. ?

    ReplyDelete
  8. அடடா.... அருமை. அருமை.

    என்னவென்று பாராட்டுவது?

    நன்மை தடையின்றி நம்மைத் தொடர்ந்திடும்
    உண்மையைச் சொன்னீர் உணைர்ந்து!

    ReplyDelete
  9. ஆசைகளைத் துறந்த மனிதனின் அகத்தில் மட்டுமே அமைதி தவழும் என்ற உண்மையை அழகிய கவி வடிவமாய்த் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா ! த.ம .7

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா
    உலகிலேயே அதிவேகமாக பயணம் செய்வது நன் மனம் தான். நம் மனம் நினைத்தால் நாம் இப்பொழுது அமெரிக்காவில் இருக்க முடியும். மனம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அதனைச் சரியாக கையாளத் தெரிந்தால் என்றும் வெற்றி தான் எனும் அழகிய கருத்தைத் தாங்கிய அழகான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  11. அருமையான அறிவுரை கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  12. மனத்தை எப்படி ஐயா அடக்கிவைக்கமுடியும். முடியாத ஒன்றை மிக எளிதாகக் கூறிவிட்டீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. முயன்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. மொத்தமாக கத்துக்கிட்ட
    வித்தைகளும் தத்துவமும்
    சித்தத்திலே என்னவினை செய்யும் ?-அது
    கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்
    என்னை குழப்பிவிட்டு தெளிவாக்கிய நல்லவரிகள் ஐயா...

    ReplyDelete
  14. நன்றின்பால் உயிப்பது அறிவு...

    ReplyDelete
  15. மிக நல்ல ஓசை நயத்துடன் கருத்துள்ள கவிதை!

    ReplyDelete
  16. பிரமாதம் அய்யா...

    ReplyDelete
  17. சிறப்பான வரிகள், சீரிய கருத்துக்கள்..

    ReplyDelete
  18. "மொத்தமாக கத்துக்கிட்ட
    வித்தைகளும் தத்துவமும்
    சித்தத்திலே என்னவினை செய்யும் ?-அது
    கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்" என்ற
    வழிகாட்டலை வரவேற்கிறேன்!
    சிறந்த எண்ண வெளிப்பாடு!

    ReplyDelete
  19. நல்ல அறிவுரை கவிதை.

    ReplyDelete
  20. சித்தர் பாடல் படித்தது போல் இருக்கிறது. துள்ளிவிளையாடும் சந்தமும் கருத்தும் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன

    ReplyDelete
  21. மனம் அதனை அடக்கி விட்டால்....

    அது தானே நம்மால் முடியாது என்று தோன்றுவது.....

    சிறப்பான கவிதை.

    த.ம. +1

    ReplyDelete
  22. ஆழமான சிந்தனைகள் பொதிந்த கவிதை! ஆஹா போட வைத்த கவிதை!

    ஆசையைத் துற! மனிதனால் முடியாத ஒன்று! அதனால் தானே உலகில் இத்தனைச் துன்பங்கள்!

    தங்கள் கவித்திறமைக்கும், எண்ணங்களுக்கும் வணங்குகின்றோம் சார்!

    ReplyDelete
  23. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : அ.பாண்டியன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : அரும்புகள் மலரட்டும்

    வலைச்சர தள இணைப்பு : சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!

    ReplyDelete
  24. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  25. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete