Wednesday, June 18, 2014

கவிதைப் புதிர்

ஓரிடத்தில் எடுத்து
ஊரெல்லாம் தெளித்து
ஓடுதொரு வண்டீன்னு சொன்னா-அது
கார்ப்பரேசன் குப்பைவண்டி நைனா

நிரப்பிவச்ச நீரை
வீதிபூராம் சிந்தி
பற்க்குதொரு வண்டின்ணு சொன்னா-அது
கார்ப்பரேசன் தண்ணிவண்டி நைனா

நிறுத்தத்தை விட்டு
நூறுஅடி தாண்டி
வெறுப்பேத்தும் வண்டின்ணு சொன்னா-அது
அரசாங்க டிரான்ஸ்போர்ட்டு நைனா

கரும்புகையைக் கக்கி
இடிச்சத்தம் போட்டு
ஒருஜீப்பு உன்முன்னே போனா-அது
ஊழியருக் கானவண்டி நைனா

சுழல்விளக்குச் சுற்ற
பார்ப்பவர்கள் சொக்க
அழகுவண்டி சாலையிலே போனா-அது
அதிகாரி வண்டியது நைனா

நூறுவண்டித் தொடர
சைரனொலி தெறிக்க
சீறிக்கிட்டு வண்டியொன்னு போனா-அது
அமைச்சரோட வண்டித்தான் நைனா

காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு  வண்டின்னு  சொன்னா -அது
யாரோட வண்டியது நைனா ?

31 comments:

  1. அட, எல்லாம் சரிதான்.
    கடைசி சொன்ன வண்டி.. ஹெலிகாப்டரா?
    த.ம.2

    ReplyDelete
  2. இன்னா நைனா? அது எந்த வண்டி ?
    தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது தானோ? ஹாஹா...

    ReplyDelete
  3. நிச்சயமாக, மிக முக்கியமானவரின் வண்டியாகத்தான் இருக்கும். ;)

    ReplyDelete
  4. அந்த அதி அவசரக்காரர், எதுவும் செய்யாத முக்கியமானவராத்தான் இருக்கும்.. # சதம் போட்டு பேசுனா விசத்த வச்சிருவாங்க..ம்ம் ம்ம்

    ReplyDelete
  5. அட அது நம்ம கவிதை வண்டி சரிதானே ரமணி ஐயா ?..(கவிஞர்களால்
    அனுப்பப்படும் கவிதை எனும் சரக்கு வண்டி :) )
    கவிஞர்களின் சிந்தனைக்குத் தடை விதிக்க இங்கு யாருக்குத் தான் வல்லமை உண்டு நைனா ?..:)))))))))) அருமை அருமை ! வாழ்த்துக்கள்
    ஐயா .

    ReplyDelete
  6. super! Last one I guess...(C.M )

    ReplyDelete
  7. வண்டி எத்தனை வண்டி என்றதில்தான் உங்கள் நையாண்டி கவிதை!
    Tha.ma.5

    ReplyDelete
  8. நன்றாக உள்ளது. நைனா..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. கவிதைப்புதிர் வாக்னங்களை விட வேகம்..!

    ReplyDelete
  10. நீங்களே சொல்லிடுங்க ஐயா...

    ReplyDelete
  11. சொன்னா வரும் கேடு -அதை
    சொன்ன வரின் வீடு
    என்னா ஆகும் நைனா -நீங்க
    எண்ணிப் பாரும் மெயினா

    ReplyDelete
  12. கவிதைக்குள்ளேயே புதிர்.
    அருமை இரமணி ஐயா.

    அப்படி போற வண்டி என்ன வண்டியாக இருக்கும்....?
    புலவர் ஐயாவிற்குத் தெரிந்திருக்கிறது. அதையும் புதிரான இயைபுடன் சொல்லி இருக்கிறார்.

    புலவர் ஐயா... நைனாவிற்கு மெயினா... என்ன அழகான இயைபு !! சூப்பர்.

    ReplyDelete
  13. எல்லாவற்றையும் சொன்ன உங்களுக்கு தெரியாதா என்ன. ?

    ReplyDelete
  14. ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல்... நெடுநாட்களுக்கு பிறகு வருகை தந்த எனக்கு புதிர் காத்திருக்கிறது. கவிதை வண்டியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.

    .ரசிக்கவைக்கும் வரிகள் ஐயா. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    சில நேரங்களில் என்னுடைய வண்டியா இருக்கலாம் ஐயா.
    (நகைச்சுவையாக)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வணக்கம்
    த.ம 11வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. பொய்யாத வார்த்தை புதிராக சொன்னீர்கள்
    ஐயா இதுவல்லோ நாடு !

    செம சுப்பர்

    12

    ReplyDelete
  18. புதிர்க் கேள்விக்கு விடை ஆம்புலன்ஸ் ( Ambulance ) என்று எண்ணுகிறேன். விடை சரியா ஐயா ?

    கவிதை வரிகள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  19. வம்புல மாட்டி விடறீங்களே ஐயா! புதிர்க்கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. ஓரிடத்தில் எடுத்து
    ஊரெல்லாம் தெளித்து
    ஓடுதொரு வண்டீன்னு சொன்னா-அது
    கார்ப்பரேசன் குப்பைவண்டி நைனா


    நான் கூட மேகத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன் நண்பரே.

    ஒவ்வொரு சிந்தனைகளும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்றன.

    ReplyDelete
  21. காவலர்கள் தடுக்க
    காத்துவூரே நிக்க
    போவதொரு வண்டின்னு சொன்னா -அது
    யாரோட வண்டியது நைனா ?


    அன்றாடம் நடக்கும் நிகழ்வுதானே நண்பரே..

    தேர்தலில் நிற்கும் ஒருவருக்காக
    ஊரே காத்து நிற்கும் - சாலை சந்திப்புகளில்..

    முதலில் தேர்தலில் அவர் நிற்பார்
    பிறகு ஆட்சிகாலம் முழுக்க
    அவருக்காக நாம் நிற்போம்!

    ReplyDelete
  22. நீங்களே சொல்லி விடுங்களேன்

    ReplyDelete
  23. புதிரின் விடை தெரிந்தவர்கள் அனைவரும் பூடகமாய்ச் சொல்வதிலிருந்தே புரிகிறதே அது யாருடைய வண்டியென்று! ரசிக்கவைக்கும் கவிதைக்குள்ளிருக்கும் உண்மை, முகம் சுழிக்கவைப்பதும் உண்மை.

    ReplyDelete
  24. நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா சொல்லமாட்டேன் ஐ!

    ReplyDelete
  25. வித்யாசமான மொழியில் அரசியல் பேசும் இந்த கவிதை உங்கள் மேதமைக்கு மற்றும் ஒரு சான்று:)

    ReplyDelete
  26. புதிர் போட்ட கவிதை அருமை! இரசித்தேன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  27. புதிர் கவிதை....
    விடை சொன்னால்
    விழும் உதை!

    புலவர் ஐயா சரியா சொல்லி இருக்காரே!

    ReplyDelete
  28. புலவர் ஐயா சொன்னது போல
    எந்த வண்டினு நான் சொல்லல
    நடைமுறை வாழ்வில்
    நேரில் கண்ட காட்சிகளாக
    தங்கள் கவிதையிலே
    எல்லா வண்டியும் ஓடுது
    ஐயா!

    ReplyDelete
  29. காவலர்கள் தடுக்க
    காத்துவூரே நிக்க
    போவதொரு வண்டின்னு சொன்னா -அது
    யாரோட வண்டியது நைனா ?//

    பாவப்பட்ட மக்கள்
    பாழாய் போகிறதென்று
    ஓட்டுப் போட்டு
    ஆட்சியில் ஏறுபவரின்
    ஆணவமிக்க வண்டி நைனா!

    தினம் தினம் காணும் காட்சி, அனுபவமும் கூட...

    ஐயோ வம்பில் மாட்டிக் கொண்டோமோ?!!!!!!

    தினமும் எங்கள் மீது குப்பை லாரி துப்பிச் செல்லும்....ஐயொ என்று நினைக்கும் போது....

    அதன் பின்னால் வரும் தண்ணீர் லாரியிலிருந்து கோடை கால அருவியாய் விழும் தண்ணீரில் குளித்துச் செல்வோம்!

    அருமையாக நடைமுறை வாழ்வை அழகாகச் சொல்லும் கவிதை! தங்கள் திறமை மிகவும் வியக்க வைக்கின்றது சார்!!!!

    ReplyDelete