Wednesday, June 4, 2014

நகைச்சுவை குறித்து ஒரு சிறு அலசல்

நவரசங்களில் நகைச்சுவைக்குள்ள
மதிப்பே அலாதிதான்

என்னுடைய நண்பர் நகைச்சுவைத் துணுக்குகள்
குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்

அவரிடம் நகைச்சுவைத் துணுக்குகளின் வகைகள்
குறித்து நிறையப் பேசி எனக்கு அது குறித்த
ஒரு விசாலமான பார்வை உண்டு

முதலாவதாக
சூழலை வைத்து அமைகிற  ஒன்றுமற்ற
வார்த்தைகூட நம்மை அதிகம் சிரிக்க வைக்கும்

உதாரணமாக:
கல்யாணப்பரிசு படத்தில் மாப்பிள்ளை
என்ன பண்ணுகிறார் எனக் கேட்கிற கேள்விக்கு
டணால் தங்கவேலு "மாப்பிள்ளை போண்டா
சாப்பிடுகிறார்  "எனச் சொல்வது

அதேபோல்
அமரதீபம் படத்தில் பத்மினி அவர்களும் 
நடிகர் திலகம்அவர்களும் காதல் உணர்வில் மூழ்கிப்
பேசிக் கொண்டிருக்கையில்
சிவாஜி அவர்கள் அங்கு மரத்தடியில் கிடக்கிற
ஒரு வேரைகையில் எடுத்து பத்மினியின்
முகத்துக்கு நேராக
ஆட்டியபடி பேசிக் கொண்டிருப்பார்

காதலியைக் கவர வழிதெரியாது
 தவித்துக் கொண்டிருந்த டணால் தங்கவேலு அவர்கள்
பத்மினி நடிகர் திலகத்திடம்
மயங்கியபடி பேசிக் கொண்டிருப்பது
அந்த வேரின் மகிமையால்தான் என்கிற
முடிவுக்கு வந்துஅவர்கள் அந்த இடத்தை விட்டு
அகன்றவுடன்அங்கு  கிடக்கும் வேறொரு வேரை
கையிலெடுத்துக் கொண்டு தன் காதலியிடம் சென்று
அவரது முகத்துக்கு நேராக ஆட்டியபடி அதேபோல்
காதல் மொழிகள் பேசுவார்

கோபமான காதலி சட்டென அவரை அறைந்துவிட்டு
சென்று விடுவார்.கன்னத்தைத் தடவியபடி
டணால் தங்கவேலு "அது வேரு இது வேறோ "என்பார்
அந்தக் காட்சியை எத்தனை முறைப் பார்த்தாலும்
நம்மால் சிரிக்காமல் இருக்கமுடியாது

உதாரணத்திற்குச் சொன்ன இரண்டு துணுக்குகளிலும்
சூழல் காரணமாக வெற்று வார்த்தைகள் அதிக
சிரிப்பைத் தரமுடியும் என்பதற்கு உதாரணங்கள்

அடுத்த வகை குறித்து அடுத்த பதிவில்

இதே போன்று சூழல் காரணமாக வெற்று வார்த்தைகள்
அதிக சிரிப்பை ஏற்படுத்திய காட்சியை நீங்களும்
பகிருங்களேன்,சேர்ந்து மகிழ்வோம்

22 comments:

  1. // "அது வேரு இது வேறோ "//

    அருமையான நகைச்சுவை. சிரித்தேன். ரஸித்தேன். தொடருங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ரசித்தேன்... நாகேஷ் அவர்கள் ஒற்றை வார்த்தையில் சிரிக்க வைப்பதில் நிபுணர்...!

    ReplyDelete
  3. இந்த மாதிரியான நுணுக்கங்கள் அதிகமாகவே ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும்.. தொடருங்கள்..

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.
    நகைச்சுவை எப்போதும் உடலுக்கு நல்லதுவாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அட..
    புது வகையான அறிமுகம் ..

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது பதிவு......
    ரசிக்கிறேன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. இது பற்றி சுஜாதா ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். விகடனில் வந்தது. ஒருவேளை, கற்றதும் பெற்றதும்-இல் கூட வந்திருக்கலாம்.

    ReplyDelete
  9. மைக்கேல் மதன காமராஜன் படம். மீசை எடுத்த கமலைப் பார்த்து குஷ் 'மீசையை எடுத்துட்டீங்க...' என்பார். 'ஆமாங்க... கிருதாவக் கூட எடுத்துட்டானுங்க..' என்பார் ராஜு கமல். பெங்களுரு போகும் கவலையில் இருக்கும் குஷ் தன் தந்தை வெ.ஆ. மூ யிடம் 'இப்ப என்ன செய்யறது டாடி?' என்பார் கவலையாக, தொடர்ச்சியாக! கமல் தன் மீசை கிருதா பற்றித்தான் குஷ் கவலைப்படுவதாக நினைத்து 'அது பரவாயில்லங்க... வளர்ந்துடும்' என்பார்!

    ReplyDelete
  10. அது வேரு. இது வேறா!? >>
    ரசித்தேன்.

    ReplyDelete
  11. சிறந்த அலசல்
    "சூழலை வைத்து அமைகிற ஒன்றுமற்ற
    வார்த்தைகூட நம்மை அதிகம் சிரிக்க வைக்கும்" என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு:)! @ ஸ்ரீராம், கமல் + கிரேஸி மோகன் கூட்டணியில் பல வசனங்கள் இப்படி இரசிக்க வைக்கும்.

    ReplyDelete

  13. வணக்கம்

    எல்லாச் செயலிலும் ஏந்தும் நகைச்சுவையை
    வல்லோன் அறிவான் வகுத்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  14. ரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றி ஐயா கூடவே ஓர் அருமையான
    யோசனையையும் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. நீங்கள் குறிப்பிட்ட நகைச்சுவைகளை ரசித்தேன். தொடருங்கள்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. நகைச்சுவை குறித்த விளக்கமும் உதாரணஙகளும் ரசிக்க வைத்தன்! நன்றி!

    ReplyDelete
  17. "அது வேரு இது வேறோ "//

    நல்ல வார்த்தை விளையாட்டு நகைச்சுவை! மிகவும் ரசித்தோம் பார்த்த காட்சிதான் என்றாலும் தாங்கள் சுவையோடு எழுதியிருப்பது இன்னும் ரசிக்க முடிந்தது!

    பகிர்வுக்கு மிக்க நன்றி! அடுத்த பதிவுகளையும் எதிர்பார்க்கின்றோம்!

    ReplyDelete
  18. வணக்கம் !
    தங்களுக்காகவே ஒரு பாடல் காத்திருக்கின்றது ரமணி ஐயா அவசியம் வந்து பாடி மகிழ்வதோடு தங்கள் உயர்வான நற் கருத்தையும் கூறி விடுங்கள் .மிக்க நன்றி ரமணி ஐயா .

    ReplyDelete
  19. அட... தொடர்ந்து நகைச்சுவை பற்றிய பதிவா....

    நீங்கள் சொன்ன இரண்டு காட்சிகளும் மிகவும் ரசித்தேன். தொடர்ந்து ரசிக்க நாங்க ரெடி!

    ReplyDelete
  20. நகைச்சுவை என்பது இயல்பாய் மனத்துக்கு இதமாய் நினைக்கும்போதே சிரிப்போ சிறு முறுவலோ வரவழைக்கவேண்டும். அந்த வகையில் தாங்கள் பகிர்ந்துள்ள இரண்டு காட்சிகளுமே அற்புதம். ஆனால் சமீபகாலமாக நகைச்சுவை என்பது திரைப்படங்களிலும் சரி, பொதுவாழ்க்கையிலும் சரி, அடுத்தவரைப் புண்படுத்துவதாகவோ, கேவலமான இழிசொற்களால் குறிப்பிடுவதாகவோ, உடற்குறைகளை மையப்படுத்தியோ இருப்பது மிகவும் வருத்தமும் வேதனையும் தரும் விஷயம். தொடர்ந்து தாங்கள் எழுதவிருக்கும் நகைச்சுவை பற்றிய பகிர்வினை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  21. ம்ம்.. உண்மை. தொடர்கிறேன் உங்கள் பதிவை. நமது தளம்:http://newsigaram.blogspot.com

    ReplyDelete