Saturday, August 23, 2014

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

17 comments:

  1. சீராட்டவும்,பாராட்டவும் வேறாக பதிவுலகு இருக்கும்தான்/இருக்கவேண்டும்.

    ReplyDelete
  2. சந்தமதும் சிந்தனையும்
    சந்தனமும் குங்குமமாய்
    ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
    பொங்கிவரத் தடையுண்டோ கூறு

    ஆஹா அருமை அருமை! ரொம்ப நாளைக்கு அப்புறம் இல்ல நலம் தானே? நல்ல பகிர்வு தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  3. குறையொன்றுமில்லை. :)))

    ReplyDelete
  4. ஆம் பதிவுலகு இருக்க என்ன குறை:) வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  5. ஆமாம் கவிஞரே! வலைப்பதிவு போல் வருமா?
    த.ம.3

    ReplyDelete
  6. #வேராகப் பதிவுலகு இருக்க-#
    வேறாக இல்லை என்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் !
    த ம 1

    ReplyDelete
  7. வேராகவும் தாயாகவும் பதிவுலகு இருக்கு...

    ReplyDelete
  8. ’’ ஆலம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ”

    கண்ணதாசன் பாடலில் வந்த இந்த வரிகள்
    நினைவில் வந்ததையா!

    பதிவுலகும் உறவுகளும் வேர்கள்தான் ஐயா!
    அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சீராட்டவும் பாராட்டவும்
    தாயாக உறவாக
    வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
    வழங்குவதில் குறைவருமோ கூறு

    அருமையான கருத்து!

    ReplyDelete
  10. அருமையான கவிதை! தொடர்கதை என்ன ஆச்சு ஐயா?

    ReplyDelete
  11. சீராட்ட பாராட்ட
    தாயாக உறவாக
    வேராகப் பதிவுலகு
    என்றும் இருக்கும்
    தம 9

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரரே!

    கவிதை அருமை! கவிதையின் ஒவ்வொரு வரிகளும் சிறப்பான பொருளைத்தருகிறது!

    "சீராட்டவும் பாராட்டவும்
    தாயாக உறவாக
    வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
    வழங்குவதில் குறைவருமோ கூறு"

    பகிர்வுக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. இப்படியெல்லாம் நீங்கள் கவிதையில் கல்லும் போது எங்களைப் போன்றோர் உங்களது படைப்புகளை "லைக்" போடுவோம்! எங்களுக்கு இது போன்றெல்லாம் கவி எழுத முடியலையே!

    இறுதி வரிகள் அருமையோ அருமை!

    தொடர் என்னாயிற்று ரமணி சார்?!

    ReplyDelete
  14. தங்கள் எண்ணப் பதிவை விரும்புகிறேன்.
    தாங்கள் வழங்கும் கவிச்சீரைச் சுவைக்க
    நாம் இருக்கின்றோம்!

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.
    சொல்ல வேண்டிய கருத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete