Monday, November 3, 2014

ரோடு எல்லாம் "பாரு" நோக்கித் தானே போகுதா ?

ரோடு எல்லாம் "பாரு" நோக்கித்
தானே போகுதா ?-இல்லை
கூறு கெட்டுக் கால்கள் இரண்டும்
இழுத்துப் போகுதா ?

ராவு ஆனா இந்த ரவுசு
தாங்க முடியலே-இந்த
நோவு என்று தீரு மென்னு
எனக்கும் புரியலை

பொண்ணு ஒண்ணு டாவடிச்ச
குஷியில் ஒருத்தனும்-பின்னே
பொண்ணு ஒண்ணு நோகடிச்ச
வெறியில் ஒருத்தனும்

தள்ளிக் கொண்டு போயி எனக்கு
ஊத்தி விட்டானே-அந்த
லொள்ளுச் சனியன் பிடியில் இப்போ
சிக்கிப் புட்டேனே

ஊருக் கெல்லாம் பாதை ரெண்டு
இருந்திடக் கூடும்-ஒன்னு
சீரு கெட்டா அடுத்த ஒன்னில்
போயிடக் கூடும்

"பாருக்" கெல்லாம் பாதை ஒன்னு
தாண்டா தம்பி -அதில
போயிப் புட்டா அம்புட் டுத்தான்
தொலஞ்ச தம்பி


(சாலையில் போதையில் கிடந்த ஒருவனின் புலம்பல்
கேட்டு எழுதியது. இதில் நான் என்பது நான் இல்லை
எனச் சொல்லவும் வேண்டுமோ ? )

13 comments:

  1. வாவ் ...
    சமூக நல கவிதை அருமை
    என்ன செய்யப் போகிறோம் .. இதனை எதிர்த்து என்ற கேள்விகளை எழுப்பிய கவிதை...
    நன்றி

    ReplyDelete
  2. paarukkulle நல்ல நாடு பாரதி சொன்னான்.barukkulle நல்ல நாடு பண வருமானம் சொல்லுது.
    மானம் போக ஏழை வயிருகாய வருமானம் பெருக அரசியல் ஒப்பண்டகரர் வாழ இந்த வயிற்றெரிச்சல்
    எங்கே சொல்ல.
    வையகத்தில் வாழ்ந்துதான் என்ன லாபம்.---

    ReplyDelete
  3. //"பாருக்" கெல்லாம் பாதை ஒன்னு
    தாண்டா தம்பி -அதில
    போயிப் புட்டா அம்புட் டுத்தான்
    தொலஞ்ச தம்பி//

    படிக்கும்போதே போதையேற்றி மிகவும் ரஸிக்க வைத்த வரிகள். பாராட்டுகள். வாழ்த்துகள். - VGK

    ReplyDelete
  4. மதுவில் மயங்க அருந்து வீட்டின்
    அகத்தே தயக்கம் எதற்க்கு ...

    நெற்றி பொட்டில் அடித்தாலும் சூடுபட்ட சுவடே தெரியாம போய்க்கிட்டே தான் இருக்காங்க ஐயா...

    ReplyDelete
  5. " "பாருக்" கெல்லாம் பாதை ஒன்னு
    தாண்டா தம்பி -அதில
    போயிப் புட்டா அம்புட் டுத்தான்
    தொலஞ்ச தம்பி" என்ற
    அடிகளைக் கொஞ்சம் எண்ணிப்பாரு
    எங்கட தம்பிமாரே என்றாலும்
    எவர் தான் திருந்துவரோ?

    ReplyDelete
  6. புலம்பலில் அவன் தெரிந்தே பாருக்குள் போகிறான் போலிருக்கிறதே.

    ReplyDelete
  7. இன்றைய யதார்த்தம்
    அருமை ஐயா
    தம3

    ReplyDelete
  8. ஒரே ஒரு பாதை மட்டுமே இருந்தால்..... பாவம்
    அவன் எங்கே போவான்?

    மாற்று இருந்தால் தானே வேறு போக முடியும்....

    திருந்த நினைத்தாலும் திருந்த விடாத நாடு. மன்னிக்கவும் ரோடு.

    த.ம. 4

    ReplyDelete
  9. பாருக்" கெல்லாம் பாதை ஒன்னு
    தாண்டா தம்பி -அதில
    போயிப் புட்டா அம்புட் டுத்தான்
    தொலஞ்ச தம்பி//

    விழிப்புணர்வு கவிதை அருமை.

    ReplyDelete
  10. அருமையான விழிப்புணர்வு கவிதை...

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா.

    சொல்லால் அடிக்கும் கவிதை ஐயா.. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. விழிப்புணர்வு தரும் கவிதை. எங்கே போகிறோம்....

    பாருக்குத்தான் என்று சொல்லும் இளைஞர்களை என்ன சொல்ல....

    த.ம. +1

    ReplyDelete
  13. கேள்விகளை எழுப்பிய கவிதை...அருமை

    ReplyDelete