Monday, February 9, 2015

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..

அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிக நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்

எனவே....

17 comments:

  1. அருமை அருமை கவிஞரே தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மை தன ரமணி சார். சோர்வடைந்தவர்களுக்கு நாம் ஆறுதல் கூ'ட சொல் வேண்டியதில்லை. அவர்கள் சொல்லும் குறைகளை கேட்டுக் கொண்டாலே அவர்களுக்கு சற்றே நிம்மதித் தரும் .

    ReplyDelete
  3. சிந்தித்து செயல்படுத்த வேண்டிய சீரிய கருத்து.

    ReplyDelete
  4. சொல்ல எல்லோருக்கும் விஷயம் இருக்கிறது. ஆம், கேட்கத்தான் ஆளில்லை.

    ReplyDelete
  5. சிறப்பாய் சொன்னீர்கள்! நொந்து வந்தவர்களை நோகடிக்காமல் காது கொடுத்து குறை கேட்டால் அவர்கள் பாரமாவது குறையும்தான்! அருமை!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.

    உமையான வரிகள் கருத்து மிக்கவை பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. //உரிமை என்கிற பெயரில்
    உறவுகளால் அடிமையாக்கப்பட்டு//
    வலிக்கும் உண்மை..

    ReplyDelete
  8. உண்மைதான் சில சமயங்களில் நம்மையும் அறியாமல் நாம் அசட்டையாக நடந்து கொள்கிறோம் . சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்

    ReplyDelete

  9. வாய் பேசாது செவி யுற்றாலே போது
    குவியும் அவரது சோகம் குறையும்!
    பதிவின் கருத்து பாசுரம்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    வணக்கம்!
    இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
    படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
    நன்றி!

    ReplyDelete
  10. //அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு இறுதியாக உங்களிடம் அடைக்கலமென வருவோருக்கு உங்களது சிறு அலட்சியம் உங்களது சிறு முகச் சுழிப்பு அவர்களுக்குள் ஒரு பெரும் பிரளயத்தை உண்டாக்கிவிடக் கூடும்//

    ஆம். அவர்கள் குறைகளைப் பொறுமையாகக் காதால் கேட்டுக்கொண்டு, சிறு ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலே போதும், அது அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் அளித்திடும்தான்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. உரிமை என்கிற பெயரில்
    உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
    அவதிப் படுவர்களாக//

    உண்மை பளிச்! அருமையான கவிதை!

    ReplyDelete