Monday, August 10, 2015

எத்தராட்டம் ஒழிக்க எளிய வழி

இல்லை யென்று சொல்பவனும் மூடனே-அவனை
மறுத்து வெல்ல நினைப்பவனும் மூடனே
உள்ளத் தாலே உணரலாகும் ஒன்றையே-தனது
அறிவு கொண்டு தேடுவோனும் மூடனே

சுழித்து ஓடும் ஆறதனின் குளுமையை-கரையில்
நின்று கொண்டு உணர்ந்திடவும் கூடுமோ ?
குளித்து குளிரின் நடுங்குவோனின் நிலையதை-கரையில்
ஒதுங்கி நின்றோன் நடிப்பென்றால் விளங்குமா ?

எரிக்கும் பசியில் துடிப்பவனின் அவஸ்தையை-உண்டு
நெளிந்துக் கிடப்போன் உணர்ந்திடவும் கூடுமோ ?
பசிக்க வென்று ஓடுபவனின் நிலையதை-பசியில்
துடித்து நிற்போன் புரிந்திடவும் கூடுமோ ?

உண்டு என்று சொல்லியிங்குப் பிழைக்கவும்-தெய்வம்
இல்லை யென்றுச் சொல்லிநன்குச் செழிக்கவும்
உண்டு இங்கு மனிதரென்று அறிந்திடு-அவர்கள்
சொல்லும் மொழியை உளறரென்று ஒதுக்கிடு

உந்தன் உள்ளம் கொள்ளுகின்ற நிலையதே-என்றும்
உண்மை யென்று உணர்ந்துநீயும் செயல்படு
இந்த முடிவில் யாவருமே நின்றிடின்-இங்கு
ஏய்த்துப் பிழைக்கும் எத்தராட்டம் ஒழிந்திடும்

10 comments:

  1. இதற்கு போதுமான மனத்திடம் தேவை. தன்னம்பிக்கை தரும் கவிதை.

    ReplyDelete
  2. உண்டு என்று சொல்லியிங்குப் பிழைக்கவும்-தெய்வம்
    இல்லை யென்றுச் சொல்லிநன்குச் செழிக்கவும்
    உண்டு இங்கு மனிதரென்று அறிந்திடு

    உண்மை
    உண்மை ஐயா
    அருமை
    தம +1

    ReplyDelete
  3. அருமையாக உள்ளது.
    நன்றி.

    ReplyDelete
  4. சில கருத்து வேறுபாடு கொண்டவர்கள் ஏய்த்துப்பிழைக்கும் எத்தர்களா?

    ReplyDelete
  5. Kadavul peyaral pizhaikkum evarum eththarkale undu enach sollip pizhaithaalum illai enach solip pizhaothaalum

    ReplyDelete
  6. சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உண்டு என்று சொல்லி பிழைப்பார் பற்பலருண்டு.. இல்லை என்று சொல்லி செழிப்பார் சிலருண்டு.
    இரண்டும் ஒன்று என்று சொல்வார் இங்குண்டு..
    இது சரியோ தவறோ? சொல்வார் யாருண்டு
    -SSK

    ReplyDelete