பதவிக்கான
தகுதி இருந்தும்
பதவி அடையாதவர்கள்
பிரச்சனைக் குரியவர்கள் இல்லை
அவர்கள்
சட்டெனச் சோர்ந்துபோய்
இலக்குவிட்டு விலகிவிடுதலே
இங்குள்ள பிரச்சனை
பதவிக்குரிய
தகுதி இன்றி
பதவியடந்தவர்களாலும்
நிச்சயம் பிரச்சனை இல்லை
அவர்கள்
பதவியடைந்தும் தம்மை
தகுதிபடுத்திக் கொள்ளாததே
இங்குள்ள பெரும் பிரச்சனை
தகுதிக்குரியவர்கள்
பதவிபெறாததும்
பதவிபெற்றவர்கள்
தகுதியற்று இருப்பதும் கூட
இங்கு பிரச்சனையில்லை
பதவியின் பலமும்
தகுதி குறித்த அறிவுமற்றவர்களே
பதவிக்குரியவர்களைத்
தேர்வுசெய்பவர்களாக இருப்பதே
இங்குள்ள பெரும் பிரச்சனை
இலைக்கும் கிளைக்கும்
நீரூற்றலை விடுத்து
இனியேனும்
வேருக்கு நீரூற்றுவோம்
தலைமையையும் கட்சியையும்
விமர்சித்தலைவிடுத்து
இனியேனும்
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவோம்
தும்பைவிட்டு வாலைப்பிடித்து
இதுவரை பட்டதெல்லாம்
போதும் போதும்
கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
தகுதி இருந்தும்
பதவி அடையாதவர்கள்
பிரச்சனைக் குரியவர்கள் இல்லை
அவர்கள்
சட்டெனச் சோர்ந்துபோய்
இலக்குவிட்டு விலகிவிடுதலே
இங்குள்ள பிரச்சனை
பதவிக்குரிய
தகுதி இன்றி
பதவியடந்தவர்களாலும்
நிச்சயம் பிரச்சனை இல்லை
அவர்கள்
பதவியடைந்தும் தம்மை
தகுதிபடுத்திக் கொள்ளாததே
இங்குள்ள பெரும் பிரச்சனை
தகுதிக்குரியவர்கள்
பதவிபெறாததும்
பதவிபெற்றவர்கள்
தகுதியற்று இருப்பதும் கூட
இங்கு பிரச்சனையில்லை
பதவியின் பலமும்
தகுதி குறித்த அறிவுமற்றவர்களே
பதவிக்குரியவர்களைத்
தேர்வுசெய்பவர்களாக இருப்பதே
இங்குள்ள பெரும் பிரச்சனை
இலைக்கும் கிளைக்கும்
நீரூற்றலை விடுத்து
இனியேனும்
வேருக்கு நீரூற்றுவோம்
தலைமையையும் கட்சியையும்
விமர்சித்தலைவிடுத்து
இனியேனும்
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவோம்
தும்பைவிட்டு வாலைப்பிடித்து
இதுவரை பட்டதெல்லாம்
போதும் போதும்
கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
வேரை நிர்ணயிப்பதிலும் பிரச்சனை தான்...
ReplyDeleteகொம்புபிடித்து காளைகளை அடக்கி
ReplyDeleteநாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
அருமை கவிஞரே நல்லதொரு வரிகள்
ஆம் நாங்கள் ஆளும் கட்சியென்று
ReplyDeleteஆளாளுக்கு ஆடுகின்ற போது
ஆளுங்கய்யா என்று ஆடும் கூட்டத்தை
தேர்ந்தெடுக்கும் சாமான்ய மனிதர்தானே
என்றென்றும் உண்மையான
ஆளும் கட்சி.
சிறப்பான கருத்து! மாற்றம் வாக்காளர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்! அருமை!
ReplyDeleteபிரச்சனையின் வேர் தெரிந்து விட்டது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteseeriya sindhanai. arasuppaniyil irunthathal nilaimai purindhathal.
ReplyDeleteநம்பிக்கை வைப்போம்.
ReplyDeleteமக்கள் நல்லபடி சிந்தித்தால் மாற்றங்கள் நல்லதாய் அமையும்....நம்புவோம்..
ReplyDeleteநல்ல சிந்தனை.
ReplyDelete