Saturday, August 15, 2015

பொறுப்பறியா சுதந்திரம்

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குலைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

15 comments:

  1. ஐயா... தங்களின் தகவலுக்கு...

    புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

    ReplyDelete
  2. அருமை
    உண்மை
    நன்றி ஐயா
    தம+1

    ReplyDelete
  3. அருமை நடைமுறை அறிந்தது.

    ReplyDelete
  4. மிக மிக அருமை!
    சிறப்பான எண்ணக் கோர்வைக் கவிதை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    மிகச் சிறப்பாக உள்ளது. நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையான கருத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமையான கருத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உண்மையை அழகாக விளக்கியது கவிதை
    தமிழ் மணத்தில் நுழைக்க 7

    ReplyDelete