Thursday, September 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்

சனிக்கிழமை காலையிலேயே கிளம்புதலே
சரியாக இருக்கும்எனக் கருதி இரண்டு நாட்களுக்குள்ள
ஏற்பாடுகளோடுநான் மாலை புதுகை வந்து சேர்ந்தேன்

ஏற்கெனவே பதிவில் விழா நடக்கும் இடத்திற்கான
வழியினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால்
இடத்தைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமாக இல்லை

உள்ளே மண்டபத்தில் புதுகை விழாக் குழுவினர்
அனைவரும்பம்பரமாக சுழன்றுப் பணியாற்றிக்
கொண்டிருந்தபோதிலும்முக மலர்ச்சியோடு
என்னை அன்புடன் வரவேற்பதில்
குறைவைக்கவில்லை

சென்னை  கோவை மற்றும் திருச்சிப் பதிவர்கள்
பெரும்பாலானவர்கள்முன்னமே வந்திருந்ததும்
உடன் விழாக் குழுவினருடன் இணைந்து
பணியாற்றிக் கொண்டிருந்தது ரம்மியமான
காட்சியாக இருந்தது

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக்
கொண்டிருந்துவிட்டுஅவர்கள் இரவு தங்குவதற்கு
ஏற்பாடு செய்திருந்த இடத்தில்
நன்றாக ஓய்வெடுத்தேன்

காலையில் மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம்
 விழா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன்.
பொய்கையில் பூத்திருக்கும் தாமரைபோல
 அல்லிபோலவிழாக் குழுவினர் ஒத்த உடையில்
இருந்ததுஅவர்களை வெளியூர் பதிவர்கள்
குழப்பமின்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது

மண்டபத்தின் முன்புறம் பதிவுக்கான ஏற்பாடுகளை
மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

இதற்கு முந்தைய சந்திப்பில்
செய்திருந்ததைப் போல ஒட்டு மொத்தமாக இல்லாது
ஐந்து மாவட்டங்களுக்கு ஒருவர் எனத் தனித் தனியாக
பதிவுக்கு ஏற்பாடு செய்திருந்ததும்,
அதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கென தனித் தனியாக
பக்கம் ஒதுக்கி பதிவு செய்ததும் மிகச் சிறப்பாக இருந்தது

அதற்கான காரணம் கேட்டபோது
இதன் மூலம் சட்டென ஒவ்வொரு மாவட்டத்திலும்
எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என அறியவும்
மேடையில் விடுதல் இன்றி அறிமுகப் படுத்தவும்
வசதியாக இருக்கும் என்றார்கள்

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் வித்தியாசமாகவும்
அருமையாகவும்அவர்கள் செய்திருக்கிற ஏற்பாடுகள்
என்னை மலைக்க வைத்தது

அவர்களிடம் எனக்கான அருமையான அடையாள
அட்டையைப் பெற்றுக்கொண்டு சிற்றுண்டிச்
சாலை நோக்கி நடக்கத் துவங்கினேன்

தொடரும்---

14 comments:

  1. கனவு இனிமையாக இருக்கிறது, நண்பரே. நிஜத்தில் ஒன்றையும் காணோமே?

    ReplyDelete
  2. நானும் இப்படி நடக்கவேண்டும் என்றுதான் எதிர் பார்க்கிறேன். ஆனால் எதுவானாலும் விதிப்படிதான் நடக்குமென்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு. அப்படி நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற மனப் பக்குவமும் உண்டு.

    ReplyDelete
  3. நல்ல துவக்கம் பாதி முடிந்த மாதிரி என்பார்கள்
    அந்த வகையில் புதுகை பதிவர் சந்திப்பின் துவக்கமும்
    மிகச் சிறப்பாக இருப்பதால் விழா மிகச் சிறப்பாக இருக்கும்
    என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை
    உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்
    விழாவில் சந்திப்போம்...

    ReplyDelete
  4. நீங்களெல்லாம் இத்தனை ஆர்வமும், ஒத்துழைப்புமாக இருக்கையில் விழா சிறப்பாகவே நடக்கும் என நம்பிக்கை தோன்றுகிறது அய்யா! புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் பல:)

    ReplyDelete
  5. இதை விட சிறப்பாக நடக்கும் ஐயா...

    நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  6. ஆஹா இப்படியுமா?,,
    நல்லா தான் இருக்கு,,,,,, தொடருங்கள், ஒத்த உடையில் அருமைதான்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சந்திப்புக்கு முந்தியே சந்திப்பு பற்றிய நிஜமா? கனவா?

    ReplyDelete
  8. நாளைய நிகழ்வு இன்றைக்கே உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.

    விழா சிறப்புற எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா

    கனவு நிச்சயம் வெற்றியாகும்... சிற்றுண்டி சாலையோரம் போகின்றீர்கள் அதற்கு பின்புதான் என்னவென்று அறிய காத்திருக்கேன் ஐயா.த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. கவிஞர் அவர்களே! இன்றுதான் உங்களது கால இயந்திரத்தை (TIME MACHINE ) ஓடி வந்து பிடிக்க முடிந்தது. தொற்றிக் கொண்டேன். பயணத்தை தொடர்கின்றேன்.

    ReplyDelete
  11. நடந்ததை முன்கூட்டியே சொல்வது போல என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. வித்தியாசமான கோணத்தில் தொடர் சுவாரசியம்.

    ReplyDelete
  12. காலயந்திரத்தின் தயவால் நாங்களும் உங்கள் உடன் பயணிக்கிறோம். அழைத்துச்செல்வதற்கு நன்றி ரமணி சார்.

    ReplyDelete