Sunday, October 4, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 12 )

 களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும்
நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

குளிர்ந்த காற்றும்
இரசிப்பவர்களை  இரசிப்பதே போதுமென்று 
கரையோரம் அமர்ந்திருந்து
அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும்
அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின்
ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்

நம்  புதுகைப் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

9 comments:

  1. சந்திப்பு.... ஒவ்வொருவர் மனதிலும் அது பற்றிய சிந்தனைகள்.... கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும் எனைப் போல கலந்து கொள்ளாதவர்களுக்கும்.....

    தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. aahaa நம்பவே முடியல ....இவ்வளவு சிறப்பா இருக்கும்னு

    ReplyDelete
  3. தங்களின் பங்களிப்பு அருமை கவிஞரே...

    ReplyDelete
  4. அருமை ஐயா
    புதுகையில் சந்திப்போம்

    ReplyDelete
  5. அருமை ஐயா...

    முந்தைய பதிவையும் சேர்த்து நம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  6. அழகான கவிதையில் அருமையான சந்திப்பு. சந்திப்போம்.

    ReplyDelete
  7. புதுகைசங்கமம் கடல் போல் அனைவரையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. சந்திப்போம்

    ReplyDelete
  8. அழகான சந்திப்பாக இருந்தது. தங்களின் தொடர் பதிவு!
    த ம 6

    ReplyDelete
  9. என்ன கவித்துவமான சந்திப்பாக....தொடர் போல தெரிகின்றது ?!!! விடுபட்டுவிட்டது...இணையம் வர தாமதமாகியதால்..இதோ விட்டதையும் வாசித்து விடுகின்றோம்...

    ReplyDelete