Monday, October 5, 2015

புதுகை பதிவர் சந்திப்பு, ( 13 )

சென்றஆண்டு மதுரையிலே
சந்தித்த நினைவோடு
சந்தோஷமா  இந்தஆண்டும் வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே புதுகைநோக்கி வாரோம்

முத்துநிலவன்  முன்னிருந்து
நடத்துகின்ற  சந்திப்பது
கச்சிதமாய் இருக்குமென்று வாரோம் -இதில்
கலந்துகொள்ளல் சிறப்பென்று வாரோம்   

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே புதுகை  நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத பேதமது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்லப புதுகைநோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய புதுகை நோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்

9 comments:

  1. ’வாரோம்’ என்ற சொல்லுக்கு ‘வரமாட்டோம்’ என்ற பொருள் தருமோ என நான் இதுவரை (த் தவறாக) நினைத்துக்கொண்டிருந்தேன். :)

    ReplyDelete
  2. அருமையா அழைக்கிறீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்புல மூழ்கிட்டீங்க

    ReplyDelete
  4. அருமையான அழைப்பு.சென்று வாருங்கள் எ று வழியணுப்பும் தூரத்தில் நான்.

    ReplyDelete
  5. அருமை! ஒரே சாதி! பதிவர் சாதி!

    ReplyDelete
  6. அருமையான அழைப்பு அய்யா!
    த ம 6

    ReplyDelete
  7. சிறப்பானதோர் அழைப்பு.....

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    புதுகை பதிவர் சந்திப்பு விழா அழைப்பு விடுத்தது அருமை.

    த.ம. 8

    ReplyDelete