Saturday, October 17, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 3 )

இப்படியாக அனைத்து விதத்திலும்
புதுகையில் நடக்கிற பதிவர் சந்திப்புதான்
மற்றபடி இந்தப் பதிவர்  சந்திப்பு பதிவர்கள்
அனைவரும் சேர்ந்து நடத்தும்பதிவர்  சந்திப்புத்தான்
என்பதை ஆரம்பம் முதலே அனைத்துப் பதிவர்
மனதிலும் பதியும் படியாக மிகச் சரியாக செய்தது
ஐயா முத்து நிலவன் தலைமையிலான
புதுகைப் பதிவர் அணி

இதற்கு முன் உதாரணமாக ஏற்கெனவே பதிவர்
சந்திப்பை வெற்றிகரமாக நடத்து முடித்த
சென்னை மற்றும் மதுரை பதிவர்களைச் சந்தித்து
அது குறித்து ஒரு தெளிவான ஒரு கருத்தை
உருவாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்து
சென்னைப் பதிவர்களைச் சந்தித்து முடித்து...

அதைப் போலவே மதுரையிலும் சந்திக்க
சீனா ஐயா அவர்களை பலமுறை முயன்றும்
தொடர்பு கொள்ள முடியாததால் என்னைத்
தொடர்பு கொண்டு அதற்கு ஏற்பாடு செய்யுமாறு
கேட்டுக் கொண்டார்கள்

நானும் அது மிகச் சரியாகப் பட்டதால் என்னிடமிருந்த
மதுரைப் பதிவர்கள் இணைப்பில் அனைவருக்கும்
செய்தி அனுப்பி கலந்து கொள்கிறவர்கள் தங்கள்
விருப்பத்தைத் தெரிவிக்குமாறு பணித்திருந்தேன்

எதனாலோ நால்வரைத் தவிர பிறரிடமிருந்து
பதில் பெற முடியவில்லை

உடன் இது விவரம் முத்து நிலவன் அவர்களுக்குத்
தெரிவித்து விட்டு சந்திப்பு இல்லையென்றாலும்
தனித்தனியாக தொடர்பு கொண்டு கருத்தைத்
தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டேன்

ஆயினும் இன்று வரை அவ்வாறு ஒரு முன் சந்திப்புக்கு
ஏற்பாடு செய்ய முடியாமல் போனது எனக்கு அதிகம்
மன வருத்தம் தரும் நிகழ்வாகத்தான் உள்ளது

இ ந்நிலையில் பதிவர் சந்திப்பிற்கு புதுக் கோட்டையை
சொந்த ஊராகக் கொண்ட சமூகத்தின் பால்
அதிக அக்கறை கொண்ட நேர்மைக்கு
முன் உதாரணமாக விளங்குகிற மாவட்ட ஆட்சியர்
மதிப்பிற்குரிய திருமிகு. சகாயம் அவர்களைச்
சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்
என நினைப்பதாகவும் அது குறித்துஅவரை
 நேரடியாகச்சந்தித்து அழைக்கமுடிவு
செய்திருப்பதாகவும்,
அது சமயம் மதுரையைச் சேர்ந்த பதிவர்கள்
உடன் இருந்தால் சிறப்பாக இருக்கும்
எனத் தகவல் தெரிவித்திருந்தார்கள்

அது சமயம் தான் முத்து நிலவன் ஐயா அவர்களையும்
உடன் வந்த புதுகைப் பதிவர்களையும் சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது

சரியான அனுமானமா அல்லது தவறான அனுமானமா
எனத் தெரியவில்லை, அன்றைய நிலையில் இந்த
பதிவர் சந்திப்பை நடத்தி முடிப்பது தொடர்பாக
அவர்களிடம் ஒரு மலைப்பு உணர்வு  இருப்பது
போலத்தான்  எனக்குப் பட்டது

( தொடரும் )

( நீரில் மிதக்கிற பனிக்கட்டியின் ஒரு சிறு பகுதியே
வெளியில் தெரியும்.பெரும்பகுதி தெரிய வாய்ப்பில்லை
அந்த வகையில் புதுகைப் பதிவர்கள்
இந்த நிகழ்வுக்காக எடுத்துக் கொண்ட
அக்கறை இதுபோல் அப்போதுதொடர்பில் இருந்த
பலரும் எழுதினால்தான் அவர்கள்
உழைப்பு அனைவருக்கும் புரியும் என்பதால்
இதனை எழுதுகிறேன் )

13 comments:

  1. தங்களது இந்த தொடரின் மூன்றாம் பகுதிக்கு நன்றி அய்யா! புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவிற்கு முன்பு, திருச்சி வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யலாம் என்ற யோசன இருந்தது; சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒத்து வரவில்லை.

    இப்போதைய அரசியல் சூழ்நிலையில் கலெக்டர் சகாயம் அவர்களை அழைக்காதது ஒருவிதத்தில் சரியே. ஏனெனில் எல்லோரும் சகாயத்தைப் பற்றியே பேசி, தமிழ் இணையக் கல்விக்கழகம் பங்கு பெறுவதில் அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை உண்டாகி இருக்கும்.

    தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு நிகழ்வையும் கவனமாக திட்டமிட்டு செய்திருக்கிறாா்கள் என்பது தங்கள் பதிவின் மூலம் தெரிகிறது. ஒவ்வொருவா் முயற்சியும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. நல்ல மனிதர் திரு .சகாயம் அவர்களை அழைத்து இருந்தாலும் அவரால் கலந்து கொள்ள முடிந்திருக்காது ,அவர் இன்னமும் தோண்டி எடுக்க வேண்டிய பிணங்கள் நிறைய இருக்கும் போலிருக்கே :)

    ReplyDelete
  4. நல்ல முயற்சி! அதன் பலனே விழாவின் வெற்றி!

    ReplyDelete
  5. சில தகவல்கள் வெளியே சொல்லி முடியாத நிலையில் இருந்த சமயம் அது... இருந்தாலும் தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...

    ReplyDelete
  6. அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவும் என்பதால் தொடர்ந்து எழுதுங்கள் அய்யா. தங்களின் நற்பணிக்கு நன்றி.

    ReplyDelete
  7. அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவும் என்பதால் தொடர்ந்து எழுதுங்கள் அய்யா. தங்களின் நற்பணிக்கு நன்றி.

    ReplyDelete
  8. அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவும் என்பதால் தொடர்ந்து எழுதுங்கள் அய்யா. தங்களின் நற்பணிக்கு நன்றி.

    ReplyDelete
  9. மதுரை பதிவர் சந்திப்பின் அனுபவங்கள் எல்லாம் போய்ச் சேர்ந்ததா

    ReplyDelete
  10. அனுபவத்தை பகிரும் விதம் நன்று தொடர்கிறேன்
    தமிழ் மணம் 7

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா
    தங்களின் அனுபவ தகவல் மேலும் விழாவை நடத்த உறுதுணைபுரியும் ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. தாமதமாக படிப்பதற்கு வருந்துகின்றேன்...மீள்நினைவுகளில் ஆழ்கிறேன் சார்.

    ReplyDelete