Wednesday, October 14, 2015

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

11 comments:

  1. வணக்கம்
    ஐயா
    உலகம்போற்றும் உத்தமரின் பிறந்த நாளை நினைவு படுத்தி கவியாக வெளிப்படுத்திய விதம் சிறப்பு ஐயா. அவர் மறைந்தாலும் மக்கள் இதயங்களில் உறைந்திருக்கார்... இலட்சிய கனவு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.த.ம 2
    தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை கவிஞரே தங்களது நினைவூட்டல்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. ஆஹா !!! அருமையான வார்த்தைகள் அருமையான மனிதரைப் பற்றி!! மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் !!

    ReplyDelete
  4. ஒரு இனிய நினைவு கூறல்

    ReplyDelete
  5. கலாம் நினைவைப் போற்றுவோம்.

    ReplyDelete
  6. சிறப்பானவரை நினைவுகூர்ந்த
    அருமையான கவிதை!

    நன்றி ஐயா!

    ReplyDelete
  7. அருமையான மனிதருக்கு அற்புதமான புகழஞ்சலி! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா! 20:20யில் மூழ்கிப்போகும் இளைய சமுதாயத்தை 2020க்குள் கனவு கானச் செய்ய சொன்னவருக்கு தங்களின் அருமையான அஞ்சலி வரிகளுக்கு நன்றிகள் அய்யா!!

    ReplyDelete
  9. சிறப்பானதோர் நாளில் மிகச் சிறப்பான ஒரு பதிவு.

    ReplyDelete
  10. //விடாது தொடரும் உங்கள் நினைவு
    நிச்சயம் எங்களைத் தூங்க விடாது
    //
    உண்மை

    ReplyDelete
  11. முக்கியமான ஓட்டு என் ஓட்டு!

    ReplyDelete