Tuesday, November 10, 2015

மாயக் கட்டுகளை ப்பிய்த்தெறிந்து.....

குடலுக்கு
உணவிடுபவனை விட
உடலில்
கிச்சு கிச்சு மூட்டுபவர்களே
நம்மை அதிகம்  கவர்கிறார்கள்

உடற்  சக்தி
பெருக்குதலைவிட
வெளிப்பூச்சே
நம்மை அதிகம் கவர்கிறது

திரு விழா நாட்களில்

வகை வகையாய்
உண்டு களிக்கக் காரணமானவர்களை
முற்றாக மறந்து

அழகழகாய்
கண்டு களிக்கத் தக்கவர்களையே
கண்டுச் சொக்குகிறோம்

உறவுகளை நண்பர்களை
கண்டு  அளவளாவி
மகிழ்தலை விடுத்து

முட்டாள் பெட்டிக்குள்
முழு நாளையும் திணித்து
முடங்கிக் கிடக்கிறோம்

நம் நேரமதை சக்தியை
நம் பொருளை
நயவஞ்சகமாய் கவருபவர்களில் மயங்கி

பண்டிகைகள் கொண்டாடும்
மூல காரணம் தெரியாது
சம்பிரதாயங்களில் சறுக்கிவிழுகிறோம்

திரு விழாக்கள்
பண்டிகைகள்
பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை அல்ல

அதன் காரணம் மறந்த
நம் எதிர்திசைப் பயணமே
எல்லா மடத்தனத்திற்கும் மூல காரணம்

இவைகளையெல்லாம்
என்றுநாம்  அறியப் போகிறோம் ?

மாயக் கட்டுகளைப் பிய்த்தெறிந்து
என்றுநாம்  தெளியப் போகிறோம்

10 comments:

  1. பதிவை ரசித்தேன் கவிஞரே நன்று
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. உண்மைதான் அது.

    ReplyDelete
  3. //முட்டாள் பெட்டிக்குள்
    முழு நாளையும் திணித்து
    முடங்கிக் கிடக்கிறோம்//

    ஓஹோ, நீங்க டி.வி.யைச் சொல்றீங்களா ?

    நான் நம் வலைப்பதிவுகளை அடிக்கடிப் பார்க்கும் கணினியையோ என நினைத்து பயந்து விட்டேன்.... இதுவும் கிட்டத்தட்ட அதுபோலத்தான் என்பதாலோ என்னவோ. :)

    ReplyDelete
  4. தெளியும் நாளே விடியும் நாள்..

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  6. திரு விழாக்கள்
    பண்டிகைகள்
    பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை ..அய்யா...

    ReplyDelete
  7. மாயக்கட்டுகள் கண்களுக்குத் தெரிவதில்லை.
    ஞானக்கண்கள் அனைவருக்கும் இல்லை இரமணி ஐயா.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    எல்லாம் மாயை... அதனுள் மனிதன் ஐயா.. அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete