Wednesday, January 13, 2016

மெல்வின் ஜோன்ஸ் (13.01.1879 ).



உலக அரிமா சங்க நிறுவனர்  மதிப்பிற்குரிய
மெல்வின் ஜோன்ஸ்  அவர்களின்  அவர்களின்
 பிறந்த தினம் இன்று  (13.01.1879 ).

நூறு ஆண்டுகளைக் கடந்து  இந்த இயக்கம்
இரு நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில்
 பதினான்கு  இலட்சத்திற்கும்  மேற்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டு  இன்னும் இளமையான
இயக்கமாகவும் ,மதிக்கத் தக்கமுதிர்ச்சியான  சேவை
மனம்  கொண்ட அங்கத்தினர்களைத் தொடர்ந்து
இணைத்துக் கொண்டுள்ள இயக்கமாக இருக்கிறது
எனில்  அதுதனது தாரக மந்திரமான
தொண்டும் தோழமையும்   என்கிற  நிலையில்
சற்றும் விலகாது தொடர்ந்து
பயணிப்பதால்தான்  என்றால் அது மிகை இல்லை

இன்று அவரது நினைவினைப் போற்றும் விதமாக
உலகெங்கும்பசிப்பிணி அகற்றும்  சீரிய பணியாக
10 மில்லியன்   ஏழை மக்களுக்கு உணவளிக்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டுளது

அதற்குரிய  எங்களின்  சிறு துளிப் பணியாக
எங்கள் பகுதியில் 10,000 பேருக்கு  உணவளிக்க  ஆவன
செய்வதன் மூலம்   எங்கள்அஞ்சலியைக்
காணிக்கையாக்குகிறோம் என்பதைப் பணிவுடன்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும்
 மகிழ்ச்சி  கொள்கிறோம்








11 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி ஐயா... அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மகிழ்ச்சியான செய்தி! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தாரக மந்திரமான
    தொண்டும் தோழமையும் -
    நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    மகிழ்வாக உள்ளது புதுவருடத்தில்... வாழ்த்துக்கள் த.ம 3
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே,

    தங்கள் தொண்டு சிறந்தது. மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. நல்ல உள்ளங்களை மனதாரப் பாராட்டுகிறேன்...

    ReplyDelete
  9. தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete