Saturday, January 2, 2016

Award night


உலகின் முதன்மையான சேவைச் சங்கமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ள அரிமா சங்கம்...

சேவை மற்றும் நிர்வாக ரீதியான பல துறைகளில் 
மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை வருவாய்
மாவட்டங்களை உள்ளடக்கிய 324 பி3  மாவட்டமே
உலக அளவில் சிறந்தமாவட்டமாக தெரிவு செய்து...

அதன் ஆளு நரான லயன். பி ரெகுவரன் பி எம் ஜே எஃப்
அவர்களை அம்பாசெடர் ஆஃப்  குட் வில் விருது
கொடுத்துச் சிறப்பித்தது.

உலக அரிமா சங்கம் துவங்கப்பட்ட 
ஆண்டிலிருந்து ,
(இது நூறாவது ஆண்டு ) 
இந்தியாவில் இந்த  விருதினைப் பெறும் 
முதல் அரிமா ஆளு நர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது   


அவர் அந்த  பெறுதற்கரிய விருது பெறுவதற்குக் 
காரணமாக இருந்தசங்கத் தலைவர்களை 
விருது இரவும் நடத்தி இன்று கௌரவம் செய்தார்

இந்த அரிமா மாவட்டத்தில் எல்லா சங்கங்களும்
( 130 )மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதில்
மிக முக்கியமான பதினாறு சங்கங்களைத் 
தேர்ந்தெடுத்து

அதிலும்  இன்னும் சிறந்த நான்கு சங்கங்களைத்
தெரிவு செய்து அவர்கள் மூலம் அந்த  உலகளாவிய்
விருதினைப்பெற்றுக் கொண்டார்

அந்த நான்கு சங்கங்களில் நான் தலைமைப் 
பொறுப்பில்இருந்த சங்கமும் இருந்தது என்பதால் 
நானும்
அந்த விருதினைக் கொடுக்கும் குழுவில் இருந்து
அந்த விருதினைக் கொடுக்கும் கௌரவம் பெற்றேன்.

நானும் என் சங்க சார்பாக   கீழ்கண்ட 
பெருமைக்குரிய 
விருதுகளைப் பெற்றேன்

அந்த நிகழ்வுகளைத்  தங்களுடன் பகிர்ந்து 
கொள்வதில்
மிக்க மகிழ்வு கொள்கிறேன்.












எ னது  சங்க நிர்வாகிகளுடன் ...




விழாவில் விஜய்  தொலைக்காட்சிப் புகழ்
நடனக்   குழுவினரின்  கலை நிகழ்ச்சி 

இசை அமைப்பாளர்  ஜீப்ரான்  அவர்களுடன் 

9 comments:

  1. வணக்கம்
    ஐயா

    தகவலை படித்தபோது மகிழ்வு....தாங்களும் விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் .சிறப்பான பணிகள் தொடரட்டும்

    ReplyDelete
  3. வாழ்த்துகள்! தங்கள் சேவைகள் தொடரட்டும்!

    ReplyDelete
  4. Weldon, continue your renowned services

    ReplyDelete
  5. Weldon, continue your renowned services

    ReplyDelete
  6. பாராட்டுகளும் வாழ்த்துகளும். மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்.....

    ReplyDelete
  7. நான் பார்த்துள்ள அரிமா நிர்வாகிகள் அனைவரது வீட்டிலும் அரிமா சங்கம் அளிக்கும் விருதுகள் பல இருக்கின்றன, திருச்சி குடியிருப்பில் இருந்தபோது என் மனைவி அரிமா சங்கத்தின் மகளிர் அணியில் காரியதரிசியாக இருந்தார். விருது அளித்ததற்கும் பெற்றதற்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஐயா! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete