Saturday, February 13, 2016

நானும் கவியாய் மாறிப் போறேன் தினமே

ஆத்து நீரு போகும் போக்கில்
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்

நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்

வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்

அழகு இழுக்கும்  இழுப்பில்  தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்

மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து

எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-நாளும் 
உந்தன் தயவில்  தானே கவியாய் 
உலகைச் சுத்தி வாரேன் 

16 comments:

  1. ரசித்தேன் கவிதையை, தமிழ்மண வாக்கிட்டு!

    ReplyDelete
  2. எங்கோ இருந்து என்னை இயக்கும்
    அழகுப் பெண்ணே ரதியே-நாளும்
    உந்தன் தயவில் தானே கவியாய்
    உலகைச் சுத்தி வாரேன்


    ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்பது உண்மை தான்

    ReplyDelete
  3. மரபு இலக்கணம் படிக்காமலே, இயற்கைக் கவியாக இருக்கிறீர்கள்... வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அழகுக் கவிதை...
    (வேதாவின் வலை)

    ReplyDelete
  5. வாவ்!அருமையான வரிகளுடன் அழகான் கவிதை அசத்தல்!

    த.ம

    ReplyDelete
  6. அனைவருமே கவிஞர்கள்தான். ரசனையில் சற்றே வேறுபாடு மட்டும் இருக்கக் காணலாம்.

    ReplyDelete
  7. எங்கோ இருக்கும் ரதி உங்களை கவிஞராக்கினார் ஆனால் அருகில் இருக்கும் மனைவி உங்களை நடிகனாக்கினாரா?

    ReplyDelete
  8. //எங்கோ இருந்து என்னை இயக்கும்
    அழகுப் பெண்ணே ரதியே-நாளும்
    உந்தன் தயவில் தானே கவியாய்
    உலகைச் சுத்தி வாரேன் //

    மதுரைத்தமிழன் கூட சேர்ந்து நீங்கள் கெட்டு போயிட்டீங்களா? மனைவியை மறந்து ரதியைப்பற்றி பாராட்டி இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  9. ரதியைப் போலவே உங்கள் கவிதையும் அழகு....

    த.ம. +1

    ReplyDelete
  10. எங்கோ இருக்கும் ரதி என்று கூறி யாரை ஏமாற்றுகிறீர்கள்.

    ReplyDelete
  11. "எங்கோ இருந்து என்னை இயக்கும்
    அழகுப் பெண்ணே ரதியே - நாளும்
    உந்தன் தயவில் தானே கவியாய்
    உலகைச் சுத்தி வாரேன்" என்ற அடிகளை
    அதிகமானோரின் உள்ளங்கள் உச்சரிக்குமே!

    ReplyDelete
  12. அருமையான கவிதை!

    ReplyDelete
  13. இரும்புத்துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும் விந்தைக் காந்தம் போல். நல்ல உவமை. அற்புதம்

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா
    ஒப்பிவித்த உவமைகள் ஒவ்வொன்றும் சிறப்பு ஐயா. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete