Friday, March 11, 2016

கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்

காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து  நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்

தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்

கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித்  திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்

ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்

பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது  மட்டும்  தன்னை
மறைக்க முயல்வதில்

கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த    நண்பி(மனைவி ) தன்னை
நினைவில்   நிறுத்துமே

12 comments:

  1. மிக அழகான சிலேடை. வியந்து ரசித்தேன்

    ReplyDelete
  2. மிக அழகான சிலேடை. வியந்து ரசித்தேன்

    ReplyDelete
  3. ஆஹா நல்ல ஒப்பீடு

    ReplyDelete
  4. கவிதைப் பெண்ணுக்கு ஒரு கவிதை! இரசித்தேன்!

    ReplyDelete
  5. கவிதை வரிகள் அழகு கவிஞரே
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    அழகிய வரிகள் இரசனை மிக்கவை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. ரசித்தோம் மிகவுமே

    ReplyDelete
  8. அருமை
    ரசித்தேன் ஐயா
    தம+1

    ReplyDelete