Wednesday, March 9, 2016

ஜன நாயகப் போர்வையில்

ஏழை விவசாயிகள்
பெற்றக் கடனுக்கு
வட்டி  வசூல் ஜப்திக் கெடுபிடி

பெரு முதலைகள் பெற்றக்
கடன் தொகையை வெளியிடக் கூட
சட்டத்தில் ஆயிரம்  கெடுபிடி

இல்லாதக் கொடுமையால்
அவமானத் தலைக் குனிவால்
குடிசைகளில் நாளும்  தற்கொலைகள்

நாணயப் பிசகதனை
சொல்லியும் எழுதியும்
மாளிகைகளில் நீளும்  சுக சகஜங்கள்

ட்ராக்டர் கடன் தொகை
கட்டாத விவசாயிக்கு            
போலீஸ் தடியடி

தொள்ளாயிரம் கோடி
கட்டாதவன் தப்பிக்க
மறைவாய்ப் பச்சைக் கொடி

அள்ளிக் கொடுத்தது
" அவன் காலம்"என்பான் இவன்
ஆதாரங்கள் காட்டி

தப்ப விட்டது
"இவன்  காலம் " என்பான் அவன்
ஆக்ரோஷம் கூட்டி

இருவரும் வேஷதாரிகள்
செல்வருக்கு "பல்லக்குத் தூக்கிகள்"
 இனியேனும் புரிஞ்சுக்கோ தம்பி

"ஜன நாயகப்  " போர்வைக்குள்
"பண நாயகம் " போடும் ஆட்டத்தை
இப்போதேனும்  புரிஞ்சுக்கோ  தம்பி

8 comments:

  1. யாதார்த்தம் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  2. தொள்ளாயிரம் கோடி
    கட்டாதவன் தப்பிக்க
    மறைவாய்ப் பச்சைக் கொடி

    உண்மை உண்மை கவிஞரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலையை நாடிச் செல்வதும்
    முதலாளிகள் கடன்பற்றிய கேள்விகளால் லண்டனை நாடிச் செல்வதும் இந்திய ஜனநாயக்தில் சகஜம்தான் போலிருக்கிறது

    ReplyDelete
  4. காலங்காலமாய் அதுதானே அய்யா...மறவாமல் நடக்கிறது..

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete