Tuesday, March 8, 2016

காலம் கடக்க நினைப்பது

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

20 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை.

    த.ம. +1

    ReplyDelete
  3. எதைப் பறக்க வைப்பது
    எதை இறக்கி வைப்பது
    காற்றுக்கு அது தெரியும்
    பறக்க நினைப்பதுதான்
    காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும்//
    அழகாக சொல்லிவிட்டீர்கள்.எந்த செயலில் ஈடுபடுகிறோமோ அதற்கேற்றபடி நம்மை தகவமைத்துக் கொள்ளாவிட்டால் வெற்றி கிட்டாது என்பதை உணரவைக்கும் வரிகள் அருமை

    ReplyDelete
  4. நன்றாக உரைத்தீர்கள் ஐயா.

    ReplyDelete
  5. மிக மிக அருமையான கருத்து...

    ReplyDelete
  6. இந்த மனிதனுக்கு தான் எதுவும் தெரிவதில்லை....

    ReplyDelete
  7. அதையும் மனிதன் எல்லாம் தெரிந்துகொன்டான்.அய்யா...

    ReplyDelete
  8. நல்ல சிந்தனை !

    ReplyDelete
  9. எதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  10. மிக அருமை! அற்புதமான சிந்தனை!

    ReplyDelete
  11. அருமையான சிந்தனைகள் கவிஞரே
    தமிழ் மணம் 10

    ReplyDelete
  12. அருமை கவிஞரே.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமை கவிஞரே.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. மிக அருமையான சிந்தனை.

    ReplyDelete
  15. மிக அருமையான சிந்தனை.

    ReplyDelete
  16. மிக அருமையான சிந்தனை.

    ReplyDelete