Saturday, May 7, 2016

மே 16 இல் தமிழகத்தின் விடியலுக்கு.....

சமூக அக்கறைக் கொண்ட
சில அமைப்புகள் மட்டும்
குடிக்கெதிராய்ப்
போராடிக் கொண்டிருக்க

குடியால்
குடும்பமே
சீரழிவது குறித்துப்
பெண்கள் மட்டுமே
தவித்துக் கொண்டிருக்க

குடித்துப் பழகிய
பெருங் கூட்டத்தின்
பேரமைதி
 பயமுறுத்துவதாய் இருக்கிறது

கூடவே
 குடியின் தீமைகள்  குறித்து
தம் தொண்டர்களுக்கு
அறிவுறுத்தாத தலைமை "களின்
 "கெட்டிக்காரத்தனமும்.

"படிப்படியாய்  "என்பது
குடிகாரர்களுக்கு
இப்போது இல்லை என்ற
சந்தோசமளிக்கும்
சமிக்கையோ என்றும்

சலுகைகளும்
இலவசங்களும்
" துயரில் அழுதிடும்
பெண்களுக்குத் தருகிறக்
"குச்சிமிட்டாயாய் "
இருக்கலாமோ என்றும்

மிக லேசாய்
மனதில் ஒருஎண்ணம் பரவ
மனம் மிகப் படபடக்கிறது
என்ன செய்யப் போகிறோம் ?

மே 16 இல்
தமிழகத்தின்
விடியலுக்கு
வித்திடப் போகிறோமா ?

இல்லை
அஸ்தமனத்திற்குத்தான்
மீண்டும்
ஆரத்தி எடுக்கப் போகிறோமா?

11 comments:

  1. இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்தான். எப்படி அமையப்போகிறது என்று கணிப்பதற்கு அரசியல் விமர்சகர்களே திணறுகிறார்கள். கூடவே நிறைய பயமும் இருக்கிறது. ஒருவேளை இந்த அம்மாவே மீண்டும் வந்தால் இந்த இலவசங்களுக்காக நாம் எத்தனை விலையுயர்வை தாங்கவேண்டி இருக்குமோ..!
    அருமையான பதிவு!
    த ம 1

    ReplyDelete
  2. நிச்சயம் விடியலுக்கு வித்திடத்தான் வேண்டும் பார்ப்போம் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்று

    ReplyDelete
  3. எதுவும் சொல்ல முடியாது இரமணி!

    ReplyDelete
  4. பார்த்தா அவியல் மாதிரி இல்ல இருக்குது !!

    இதிலே விடியலா ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. இன்றுபோலவே என்றும் மகிழ்ச்சி நீடிக்கும்.

    எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. அதனால் மக்கள் யாரும் எதற்கும் அனாவஸ்யமாகக் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடனும் இருக்கக்கடவது.

    தேர்தல் என்பதெல்லாம் வெட்டி வேலை + வெட்டிச் செலவுகள் மட்டுமே.

    ReplyDelete
  6. மாற்றம் மலரும் என்று எதிர்பார்ப்போம்! நன்றி!

    ReplyDelete
  7. http://www.thenewsminute.com/article/tn-polls-dinamalar-distances-itself-dinamalar-news-7s-west-tn-surveys-42655
    pl read this also

    ReplyDelete
  8. எப்படியும் விடியும் எப்படி விடியும் என்பதுதான் கேள்வி

    ReplyDelete
  9. பொறுத்திருந்து பார்ப்போம்.

    கோ

    ReplyDelete
  10. 19-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என!

    ReplyDelete