Wednesday, May 11, 2016

நூல் வெளியீட்டு விழா...

தொடர்ந்து  எழுதுவது காரணமா ,வயதா
எளிமையாக பு ரியும்படியாக எழுதுவதா
காரணம் எதுவெனத் தெரியவில்லை

ஆனாலும்கூட  வலைத்தளப் பதிவர்கள்
தங்கள் மதிப்புமிக்கப படைப்புகளை
நூலாக வெளியிடும்போது என்னுடைய
வாழ்த்துரையினையோ  ,அணிந்துரையினையோ
பெற்று வெளியிடுவது தொடர்கிறது

 அந்த வகையில்  இது ஆறாவது
அணிந்துரை என நினைக்கிறேன்

கவிஞர்  ரூபன் அவர்கள்  சிறந்த கவிஞர் ,
மனித நேயச் செம்மல் , ஊற்று இலக்கிய மன்ற
ஸ்தாபகர் பொறுப்பாளர் ,அவருடைய
"ஆயுதப் பூ " சிறுகதைத் தொகுப்பு
இலங்கையில் வருகிற மே  25 இல்
வெளியிடப்பட உள்ளது

அந்த அற்புதமான நூலுக்கு  நான் எழுதிய
வாழ்த்துரையை  இங்கு பதிவு செய்வதோடு
அந்த நூல் வெளியீட்டு  விழா    மிகச் சிறப்பாக
நடைபெறவும் ,நண்பர் ,கவிஞர் , ரூபன் அவர்களின்
இலக்கிய சேவையும்,எழுத்துப் பணியும்
சிகரம் தொடவும் , தொடர்ந்து சிகரத்திலேயே
நிலைக்கவும் மனமார்ந்த என் நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்





ரூபன் என்பது காரணப் பெயர் என்பது 
வலையில் இவரது புகைப்படம் பார்த்து 
நான் எண்ணி இருந்தேன்

அவரது கவிதைகளையும் அதற்கான
 பாடு பொருளையும் வலையில்
படித்து இளகிய மனதுக்குச் சொந்தக்காரார் 
என்கிறமுடிவில்  இருந்தேன்

சுற்றுலாவாக மலேசியாவில் நேரடியாகச் 
சந்தித்த போதுதான்,அவர் அதிரூபன் எனவும்
எத்தனை விசால மனதுக்குச் சொந்தக்காரர்
எனவும் புரிந்து கொள்ளமுடிந்தது

பொருள் ஈட்டும் முகத்தான் இலங்கைவிட்டு
மலேசியாவில் பணி புரிந்து வந்தாலும் கூட
தமிழ்மொழியின் பாற்கொண்ட வற்றாத 
தாகத்தால் மோகத்தால்,சிறந்த கவிஞராய்த்  
தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு 
அல்லாது,உலக அளவில் தன் 
சொந்தப் பொறுப்பில், கவிதை போட்டிகள்
நடத்தி பரிசுகளும் சான்றிதழ்களும்  தொடர்ந்து
வழங்கி வருவதோடு, அதன் தொடர்ச்சியாய்
ஊற்று என்கிற ஒரு இலக்கிய மன்றத்தைத் 
துவக்கிஅதை இன்னும் சிறப்பாகச் 
செய்து வருவதும் தமிழ்கூறும் நல்லுலகம் 
என்றும் போற்றி மகிழக் தக்கது

கவிஞர் ரூபன் அவர்களின் படைப்புகள்  
புத்தகமாக வெளிவருவது மிக்க மகிழ்வளிக்கிறது

சிறப்பின் காரணமாக எல்லை கடந்த
ரூபனின் படைப்புகள், 
அந்தச் சிறப்பின் காரணமாகவே
காலமும் கடக்கும் என்பதை இங்கு பதிவு
செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்
தார்த்தக் கவி. யாதோரமணி

16 comments:

  1. சிறப்பான அணிந்துரை! ரூபனின் இலக்கிய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  2. திரு ரூபனின் நுலில் இருக்கும் படைப்பு பற்றியும் ஓரிரு வார்த்தைகள் இருந்திருக்கலாமோ

    ReplyDelete
  3. G.M Balasubramaniam //

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    நூல் கையில் கிடைக்காததால்
    அது முடியாமல் போயிற்று

    ReplyDelete
  4. வாழ்த்துரையும் வாழ்த்தியவிதமும் ரசித்தேன் ஐயா. ரூபனின் பயணம் தொடரட்டும் நூல் வெளியீடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நண்பருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உண்மை சார். எனது நூலும் உங்கள் வாழ்த்துரையுடன் அதே இடத்தில் அறிமுகமாகின்றது. எல்லோரும் உங்களைத் தேடுவதாக இருந்தால் உங்களுக்குள் இருக்கும் ஒருவித சக்தியே. ரூபனுடைய நூலுக்கு நீங்கள் எழுதியிருப்பது இப்போதுதான் அறிகின்றேன்

    ReplyDelete
  7. கவிஞர் ரூபனுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் சொல்லியிருப்பது போல அவர் அதிரூபன் தான். ஒரு வரியே ஆயினும் அவரது பின்னூட்டங்கள் எந்த பதிவருக்கும் உற்சாகத்தை ஊட்டத் தவறியதில்லை.

    'வலைப்பதிவர்கள் தங்கள் நூல்கலை வெளியிடும் பொழுது வாத்துரையோ அணிந்துரையோ தங்களிடம் பெற்று வெளியிடுகிறார்கள்'என்பது நல்ல செய்தி. எனக்கு இதுவரை தெரியாத செய்தியும் கூட. இருவருக்குமே அன்பான வாழ்த்துக்கள்..



    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கும் ரூபன்
    அவர்களுக்கும்..

    ReplyDelete
  9. ’ஆயுதப்பூ’ சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் - கவிஞர் ரூபன் அவர்களுக்கு பாராட்டுக்களும், நூல் வெளியீட்டு விழா சிறப்புற அமைந்திட வாழ்த்துக்களும், இந்நூலினுக்கு வாழ்த்துரை தந்த கவிஞர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. வணக்கம்!
    அணிந்துரை வழங்கிய தங்களுக்கும் நூலினை வெளியிடவுள்ள சகோதரர் ரூபனுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா .

    ReplyDelete
  11. நூலாசிரியருக்கும், அணிந்துரை வழங்கிய தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நூலாசிரியர் நண்பர் ரூபனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தகவலுக்கு நன்றி ரமணி ஜி!

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா.

    என்னைப் பற்றியும்எனது நூல் வெளியீடு சம்மந்தமான தகவலும்.தங்களின் வாழ்த்துரையும். தங்களின் வலைப்பூவில் பகிர்ந்தமைக்கு. மிக்க நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. இருவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ரூபன் தம்பிக்கு எமது வாழ்த்துகள்! தங்கள் அணிந்துரை சிறப்பு!!!

    ReplyDelete