Sunday, May 29, 2016

சம நிலை மகாத்மியம்

சம நிலையது  தவறுகையில்தான்
 எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்வதில் ...

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்வதில்

போதையில்
 காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில் 

சம நிலையது  தவறும் சாத்தியக் கூறுகள்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளைக்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

சம நிலைப்  பராமரிப்புக்  கூட
ஒர்வகையில்
சவ நிலை அனைய தவ நிலையென   
உணர்ந்துத்  தெளிந்து   உய்வோம்

10 comments:

  1. கவிஞரே மிக நன்று!
    ஆனால் ஒதுக்குவது என்று முடிவெடுத்தவுடன், அப்படியே செய்து திரும்பிப்பார்த்தால்.... பார்த்ததால்..
    அனாதையாக நின்றேன். பிறகு
    ஊரோட ஒத்து வாழ என்னை பழகிக்கொண்டேன் ....என் ஐம்பத்தாறு வயதில்... கொடுமை.

    ReplyDelete
  2. கவிஞரே மிக நன்று!
    ஆனால் ஒதுக்குவது என்று முடிவெடுத்தவுடன், அப்படியே செய்து திரும்பிப்பார்த்தால்.... பார்த்ததால்..
    அனாதையாக நின்றேன். பிறகு
    ஊரோட ஒத்து வாழ என்னை பழகிக்கொண்டேன் ....என் ஐம்பத்தாறு வயதில்... கொடுமை.

    ReplyDelete
  3. சம நிலை தவறுகையில்தான் எல்லாம்//
    உண்மை ஐயா. அருமையான கவிதை..
    தம 2

    ReplyDelete
  4. அருமையான வரிகள்...உண்மையைச் சொல்லுகின்றன..

    ReplyDelete
  5. சமநிலை எது என்று புரிந்து கொள்வதில்தான் தவறு நேர்கிறதோ?

    ReplyDelete
  6. //-- சம நிலை தவறச் செய்பவைகளைக்
    தள்ளியே வைக்கப் பழகுவோம்//

    ஆம் டாஸ்மாக்கைப் புறக்கணிப்போம்.

    அரசியலை ஒதுக்குவோம்.
    Jayakumar

    ReplyDelete
  7. நிதானம் என்ற நிலையில் இருந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமானதே.

    ReplyDelete
  8. அருமை ஐயா! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. "சம நிலைப் பராமரிப்புக் கூட
    ஒர்வகையில்
    சவ நிலை அனைய தவ நிலையென
    உணர்ந்துத் தெளிந்து உய்வோம்"

    யோக நிலைகளில் 8 வது நிலையை குறிப்பிடுகிறீர்களோ ???

    ReplyDelete