Wednesday, May 4, 2016

அக்னி நட்சத்திரம் ?

"சித்திரைப் பின் ஏழு
வைகாசி முன் ஏழு
அக்னி நட்சத்திரம்

சூரிய பகவான்
அனலாய் தகிப்பான்
இதில் மாற்றம் இருக்காது  "
என்கிறான் ஆன்மீகவாதி

"விஞ்ஞானத்தின்படி
அக்னி நட்சத்திரம்
என ஏதும் இல்லை

அந்த நாட்களில்
கூடுதல் வெட்பம் இருக்கும்
இதில் மாற்றம் இருக்காது"
என்கிறான் பகுத்தறிவுவாதி

"ஆண்டவனின்
ஆணைக்குட்பட்டதே
பிரபஞ்ச இயக்கம்
அவன் வைத்ததே விதி"
என்கிறான் ஆன்மீகவாதி

"பிரபஞ்ச இயக்கம்
ஒரு விதியின் படியே
தொடர்கிறது
அந்த விதி ஆண்டவனில்லை"
என்கிறான பகுத்தறிவு வாதி

வாதங்கள்  முடியாது
காலம் காலமாய்த்
தொடர்ந்து கொண்டிருக்கிறது

அக்னி நட்சத்திரமும்
காலம் காலமாய்
விடாது தொடர்தலைப் போலவே

7 comments:

  1. ஆக, எல்லாம் நம் விதி!

    :))

    ReplyDelete
  2. ம்ம் உண்மைதான்,, இது தொடரும்,,

    ReplyDelete
  3. பெங்களூரில் தட்ப வெப்பம் நிறையவே மாறி வருகிறது

    ReplyDelete
  4. G.M Balasubramaniam //

    பெங்களூரிலேயே
    40 செல்ஸியஸ் எனக்
    கேள்விப்படுகிறோம்
    மதுரை 42 க்கு மேலே
    வெளியே செல்ல இயலவில்லை

    ReplyDelete
  5. திருச்சியும் தகிக்கிறது....

    ReplyDelete
  6. இங்கு எனக்கு குளிர்கிறது என்கிறேன். என் மனைவி பொறாமைப்படுகிறாள்.
    தாங்கித்தான் ஆக வேண்டும் தட்பவெப்ப மாறுதல்களை.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    ReplyDelete
  7. அக்னி வெயிலை பற்றி அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete