Tuesday, June 14, 2016

பிரிவுகள் தருகிற ஞானம்

அவன் வீட்டில்
அன்றுதான்
அவன் அவனை
அன்னியனாய் உணர்ந்தான்

வீடு நிறையப் பொருளிருந்தும்
எது எங்கிருக்கிறது என்றும்
எது எதற்கானது என்றும்
எதற்கடுத்து எது என்றும்
அதை எப்படிப் பயன்படுத்துவதென்றும்
எதுவுமே புரியவில்லை அவனுக்கு

விழித்தது முதல்
மெத்தையில் சாயும் வரை
அறுவை சிகிச்சையின் போது
அடுத்து  அடுத்துக்  கருவிகளை
மிக நேர்த்தியாய்    எடுத்துத் தரும்
தாதியாய் இருந்தவள்
இன்றில்லை என்றபோதுதான்

கையறு நிலை என்ற
சொல்லின் பொருளும்
இரு கையிழந்தவன் 
படும் துயரும்
தெளிவாய்த்  தெரிந்தது அவனுக்கு

 இந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....

திருமணம் முடிந்த  சில நாட்களில்
ஏதோ  ஒரு நாளில்
ஒரே ஒரு நாளில்
ஏதோ ஒரு பொருளை
 தேடித் தரத்  தாமதமானதற்காக
தான்  ஆடிய ருத்ர தாண்டவம்
நினைவுக்கு வர
வெந்துதான்   போனான்
மிகவும் நொந்துதான்  போனான்

 என்ன செய்வது
 "மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்பதுபோல
சில ஆணாதிக்க  ஜென்மங்கள்
பட்டுத் திருந்தி
சம நிலைப்பெறக் கூட
இதுபோன்ற  சிறு பிரிவுகள்
அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது    

10 comments:

  1. ஆண் நெடில் ... அவள் இல்லையென்றால் குறிலாகிப்போகிறான்... அருமை ... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  2. கவிதை அருமை ஐயா! வீராப்பு தேவையில்லை .

    ReplyDelete
  3. அருமை..... அருமை.

    இல்லாத போது தான் அவள் அருமை புரிகிறது!

    ReplyDelete
  4. அருமையான கவிதை.இருக்கும் போது போற்றினால் நல்லது.

    ReplyDelete
  5. இதுபோன்ற சிறு பிரிவுகள்
    அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது/ இது என்ன சிறு பிரிவா?
    /

    ReplyDelete
  6. அருமை! சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. அனைவருக்கும் பொருந்தும் கவிதை. நன்றி.

    ReplyDelete
  8. அருமையான கவிதை.இருக்கும் போது போற்றினால் நல்லது.

    ReplyDelete
  9. ஒன்றை இழந்த பிறகுதான் இழந்தவை பற்றியும் இல்லாதவை பற்றியும் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete