Wednesday, July 27, 2016

நெஞ்சில் ஈரம் என்றும் காப்போம்



ஈரம் காப்போம்
வறண்டு விடாது
ஈரம் காப்போம்

மண்ணின் செழுமைக்கு
மண்ணில் ஈரம்
மனிதரின் வளமைக்கு
நெஞ்சில் ஈரம்

கோடைச் சூரியன்
எப்படித் தாக்கினும்
அடைமடி ஈரம்
காத்திடும் பூமி

எப்படிக் கறப்பினும்
கன்றுக்கு பாலினை
ஒதுக்கியே வைத்திடும்
அழகியத் தாய்ப்பசு

அதுபோல்

சுயநலச் சூரியன்
எப்படி எரிப்பினும்
அடிமன  ஈரம்
அகலாது காப்போம்

நம் நிலை எந்நிலை
ஆன போதிலும்
நம்சுகம் கொஞ்சம்
நலிவுறும் ஆயினும்...

ஈரம் வரும்வழி
மழைவழி நதிவழி
எவ்வழி என்று
பூமி பிரிப்பதில்லை

ஈரம் வரும் வழி
மதவழி இனவழி
எவ்வழி என்று
நாமும் பிரிக்காது

நெஞ்சில் ஈரம்
என்றும் காப்போம்
அனைவரும் உயர்ந்திட
ஆனதைச் செய்வோம்

(இந்த  நிகழ்வுக்கு அனைத்து விதத்திலும்
ஊற்று அமைப்பின் சார்பாக அனைத்து
விதத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர்கள்
மதிப்பிற்குரிய  ரூபன் ராஜா மற்றும்
நண்பர் யாழ்பாவாணன் ஆகியோரையும்
அறிவுக்குக்கண்  கல்விக்கு கைக்கொடுப்போம்
அமைப்பினரையும் மனதார பாராட்டுவதன் மூலம்
நாமும் இந்த நிகழ்வில் பங்குபெறலாமே )

வாழ்த்துக்களுடன் ....



10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    ஊற்று அமைப்பின் சேவை நாடு கடந்தும் தொடரும்...எல்லா வற்றுக்கும் தாங்களின் வழிகாட்டல்தான் ஐயா

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    ஊற்று அமைப்பின் சேவை நாடு கடந்தும் தொடரும்....எல்லாம் தங்களின் வழிகாட்டல்தான் ஐயா.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது மிகச் சரி
    ஆம் நாடு கடந்தும் இது நிச்சயம் தொடரும்

    ReplyDelete
  5. வாழ்த்தப்பட வேண்டியவர்களே... வாழ்க நலம்.

    ReplyDelete
  6. ஈரம் காக்கும் நெஞ்சங்களை எப்போதும் பாதுகாப்போம்,போற்றுவோம்,

    ReplyDelete
  7. வாழ்த்தப்பட வேண்டியவர்கள்! வாழ்த்துவோம்

    ReplyDelete
  8. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

    ReplyDelete