Friday, July 8, 2016

பதிவுலகின் என்றும் மாறா வேதம்

கவியரசர்
காதலர்களுக்கு...

"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று " என்பார்

என்னைக் கேட்டால்
பதிவர்களுக்கும்

"இரண்டு நிலை வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
இன்று நிலைக்க ஒன்று
என்றும் நிலைக்க ஒன்று "என்பேன்

காரணம்...

எண்ணிகையே
எதிலும் எங்கும்
வெற்றியைத் தீர்மானிக்கும்
என்னும் சூழலுக்கென
இன்று நிலைக்க என்று
தொடர்ந்து எழுத ஒன்று

கால தேவனின்
தராசுத்தட்டு
சமரசம் கொள்வதில்லை
என்னும் உண்மைக்கென
என்றும் நிலைக்க என்று
சிந்தித்து எழுத ஒன்று

இதுவே ஆறாண்டில்
நான் கற்றப் பாடமே
இதுவே பதிவுலகின்
என்றும் மாறா வேதமே 

16 comments:

  1. தொடர்ந்து எழுதவேண்டும் என்கிறீர்களா. சிந்திக்காமல் எழுதுகிறார்கள் என்கிறீர்களா, புரியவில்லை! இரண்டுமேவா?

    ReplyDelete
  2. ஆம் இரண்டுமே தேவையாகத்தான் இருக்கிறது...விடாது கவனிக்கப் படுவதற்காகவும்
    மனதில் தொடர்ந்து மதிப்புடன் நிலைப்பதற்காகவும்.....

    ReplyDelete
  3. இவ்வாறான சிந்தனை பலருக்கு வருகிறது.

    ReplyDelete
  4. சிந்திக்க வைத்தது ஐயா.நன்றி

    ReplyDelete
  5. உண்மையான நிலையை சொல்லிவிட்டீர்கள்.தொடர்ந்து அதிக அளவில் நீண்ட நாட்கள் எழுதுவது என்பது அனைவருக்கும் கை கூடுவதில்லை. முதலில் அதிக அளவிலும் போகப் போக வேகம்குறைந்து விடுவதும் இயல்பானதுதான்

    ReplyDelete
  6. சரியான உண்மையைத்தான் சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  7. உண்மைதான், நன்றாக சொன்னீர்கள். தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலைகள் , தொடர்ந்து எழுதினால் தான் கவனிக்க படுகிறோம் என்பதும் உண்மை.
    நான். 2009 ஜூன் 1ம் தேதி எழுத ஆரம்பித்தேன். ஏழுவருடங்கள் முடிந்து விட்டது. பதிவுலகில் நானும் இருக்கிறேன் என்று வந்து போய் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  8. உண்மைதான் அய்யா. இலக்கியம் மட்டுமே எழுத வந்த என்னை, அரசியல், அனுபவம், சினிமா என்று பல்வேறு தலைப்புகளில் எழுத வைத்து விட்டார்கள்.

    ReplyDelete
  9. பயிருக்குக் கொஞ்சம் விழலுக்குக் கொஞ்சம் நீர் இறைப்போம் என்கிறீர்களா?..

    ReplyDelete
  10. அருமையான பா வரிகள்

    ReplyDelete
  11. அருமையான ஆலோசனை! நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுதுவது சிறப்பான ஒன்று! முதலில் வேகமும் பின்னர் விவேகமும் வருவது பதிவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர்கள் அறிவார்கள்! பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  12. பதிவுலகில் தான் யார் என்பதை பிறர் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தொடர்ந்து சில இடங்களை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் பதிவுகள் எழுதப்படுகின்றன என்பதையும் அவை பல வேளைகளில் சிறந்ததாகவோ அல்லது தரமானதாகவோ இல்லாமல் போகின்றது என்பதையும் ,புலி வாலை பிடித்தாயிற்று இனி விட்டால் நல்லதல்ல என்பதாக பதிவர்கள் நினைப்பதாயும் உங்கள் கவிதை புலப்படுத்துவது உண்மையே.

    கோ

    ReplyDelete
  13. நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுதுவது நலம் ஆனால் யாருக்கு நிறைவாக என்னும் கேள்வி வருகிறதே

    ReplyDelete