Sunday, August 14, 2016

சாவுக் கென்று சாவுவரும்-

சாவுக் கென்று சாவுவரும்-நம்
சஞ்சல மெல்லாம் தீர்வுபெறும்
ஈவு இரக்கம் ஏதுமின்றி-தான்
நினைத்த நொடியில் வெறிகொள்ளும்  (சாவுக்கென்று )

நோவு மூப்பு  எனச்சொல்லி-உடன்
நொடியில் விபத்து எனச் சொல்லி
நூறு காரணம் தினம் சொல்லி-தன்
கோர முகத்தைத் தினம்காட்டும்    (சாவுக்கென்று )

காலம் வெல்லும் வகையினிலே-மனிதன்
தனது எல்லைக் கடக்கையிலே
கோபம் கொண்டுப் பழித்தீர்க்க -அந்தக்
காலன் உடனே கைக் கோர்க்கும்   (சாவுக்கென்று )

முத்து முத்தாய் மணித்தமிழில்-மனம்
மயங்கிச் சொக்கும் வகையினிலே
நித்தம் கவிகள் தந்தவனை-எங்கள்
முத்துக் குமாரின் மூச்செடுத்த       (சாவுக்கென்று )


11 comments:

  1. சாதித்துக்கொண்டிருக்கும் வேளையில் சாவு. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete

  2. 'அழகே அழகே'
    'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'
    ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க
    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்
    நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!
    ஆதலால்,
    ஒரு பாவலன் / கவிஞன்
    சாவடைந்ததாக வரலாறு இல்லையே!
    ஆயினும்
    நாமும்
    துயர் பகிருகிறோம்!

    ReplyDelete
  3. அருமையான இரங்கற்பா.....

    ஆனந்தயாழ் தந்த கவி இன்று இல்லை.... வருத்தங்கள். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  4. நல்ல கவிஞர். மிக நல்ல மனிதர்.
    த ம 3

    ReplyDelete
  5. வேதனை அய்யா..

    ReplyDelete

  6. Dr B Jambulingam said...//

    உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Jeevalingam Yarlpavanan Kasirajalingam //

    உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வெங்கட் நாகராஜ் said...//
    அருமையான இரங்கற்பா.....

    //உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

    ReplyDelete
  9. S.P.SENTHIL KUMAR said...//

    உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. Seeni said...//

    உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அருமையான இரங்கர்பா அருமை...நல்லமனிதர் கவிஞர் இழப்பு கலையுலகிற்கும் அவரது குடும்பத்தாருக்கும்...

    ReplyDelete