
கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இலையினி -தொடர்
செழுமையே உனக்கினி
கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உனை
வலம்வரும் கனவினி
பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி
உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி
சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது இலையினி -முழு
நிறைவுதான் எனத்தெளி
வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteவிநாயகத் துதி நன்று.
ReplyDeleteவிநாயகர் துதி அருமை!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிநாயகர் துதி பாடி மகிழ்ந்தேன் நன்றி.
ReplyDeleteபடம் அருமை. பாடல் இனிமை. ஒவ்வொரு வரிகளும் ஒருவித மெட்டுடன் சொல்ல நல்லா இருப்பதுபோல எழுதியுள்ளது தங்களின் தனிச் சிறப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
நன்றாய் இருக்கிறது வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த பாடலை இங்கும் கேட்கலாம்.
ReplyDeleteபாடல் விமோட்சனம் பெற்றது..நானும் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன்.மிக்க நன்றி..சுப்பு சார்
ReplyDelete