Monday, September 12, 2016

என்று ஆவன செய்யப்போகிறோம் ?



உடற்குறைபாடுடையார் இந்தியாவில்
இன்னமும் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக
அவசியம் பெற வேண்டிய சலுகைகளுக்காக
போராடியபடித்தான் இருக்கிறார்கள்

PV Sindhu, PV Sindhu silver medal, PV Sindhu final match, PV Sindhu photos, PV Sindhu women singles final, Sindhu vs Carolina, Sindhu medal, PV Sindhu India, Sindhu photos, Sindhu match highlights, Sindhu match photos, Rio 2016 Olympics, Rio Games, Sports photos, Sports

இந்தியாவில் பெண்கள் தங்களுக்கு
எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக
என்ன செய்வதென்று அறியாது
திகைத்தபடியும்
சம உரிமைக்காக தொடந்து
போராடியபடியும்தான் வாழ்கிறார்கள்

ஆனாலும் கூட முழு உடற்தகுதிக்
கொண்டவர்களும்,அதிக வாய்ப்புகள் உள்ள
ஆண்களும் பெற்றுத் தராத ஒலிம்பிக்
பதக்கத்தை அவர்கள் இருவரும்தான் 
பெற்றுத் தந்து நம் இந்தியாவின் பெருமையை
உயர்த்திக் கொண்டுள்ளார்கள்

அரசும் மக்களும் அவர்கள்கள்பால்
என்று அக்கறையும்,பரிவும் கொண்டு
ஆவன செய்யப்போகிறோம் ?

17 comments:

  1. அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கு வேறு வேலைகள் பல இருக்கின்றனவே!!!!! அதுவும் மிக மிக முக்கியமானவை என்று...அப்புறம் அல்லவா இவர்கள்...

    நாம் மக்கள்தான் இவர்களை எல்லாம் ஆதரிக்கவேண்டும்...

    ReplyDelete
  2. கேள்வி மட்டுமே எதிரொலிக்கும்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. அரசாங்கம், மக்கள் ஆகிய இரு தரப்பினருமே கண்டுகொள்வதில்லை என்பது தான் சோகம்.

    ReplyDelete
  4. நமக்கு நாமே கேள்விக் கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டியுள்ளது. என்றுதான் முடிவு வருமோ?

    ReplyDelete
  5. வெற்றி பெற்றபின் சொந்தம் கொண்டாடுவதே நமது நாட்டின் செயலாக உள்ளது
    வேதனை

    ReplyDelete
  6. உண்மைதான். எவ்வளோ திட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக சென்றடைவதில்லை

    ReplyDelete
  7. உண்மைதான். எவ்வளோ திட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக சென்றடைவதில்லை

    ReplyDelete
  8. இவர்களை போல் திறமை உள்ளவர்கள் பலரை தேடி பயிற்சி கொடுத்தால் நிறைய வெற்றிகளை குவிக்கலாம்.

    வெற்றிப்பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  9. எத்தனையோ வசதி படைத்தவர்கள்செய்ய முடியாததை இவர்கள் செய்ததற்கு பாராட்டுவோம் எல்லாவற்றுக்கும் அரசா...?

    ReplyDelete
  10. வணக்கம் !

    பறம்பின் கோமான் வாழ்ந்திட்ட
    ...பாரில் வாழும் மக்களிலே
    திறமைக் கிங்கே உதவுதற்குத்
    ...திண்ணம் கொள்வார் எவருமில்லை
    கறவை மாட்டைக் கறியாக்கும்
    ...கயவர் வாழும் திருநாட்டில்
    அறுவைச் சிகிச்சை செய்தாலும்
    ...அவர்கள் மனங்கள் மாறாதே !

    திறமைகளுக்கு உணர்வளிப்போம் ஊக்கமிடுவோம் நன்றி !

    தம +1

    ReplyDelete
  11. Thulasidharan V Thillaiakathu //

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஸ்ரீராம். said...
    கேள்வி மட்டுமே எதிரொலிக்கும்.//

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் said...//
    நல்ல பகிர்வு. அரசாங்கம், மக்கள் ஆகிய இரு தரப்பினருமே கண்டுகொள்வதில்லை என்பது தான் சோகம்//

    நான் சொல்ல முனைந்ததும் அதுதான்
    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று //

    மிகச்சரி. திட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில்
    பிரச்சாரத்திற்குப் பயன்படும் அளவில்தான்

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கோமதி அரசு said...
    இவர்களை போல் திறமை உள்ளவர்கள் பலரை தேடி பயிற்சி கொடுத்தால் நிறைய வெற்றிகளை குவிக்கலாம்.//
    நிச்சயமாக /

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. G.M Balasubramaniam said...//
    எத்தனையோ வசதி படைத்தவர்கள்செய்ய முடியாததை இவர்கள் செய்ததற்கு பாராட்டுவோம் எல்லாவற்றுக்கும் அரசா.//

    அரசும். எனக் கூடச் சொல்லலாம்

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சீராளன்.வீ //தங்கள் கவிதைப் பின்னூட்டத்தினால
    பெருமை பெற்றது இப்பதிவு

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete