Wednesday, September 14, 2016

ஊரை எரிக்கும் நீர்

தீர்ப்பு வந்ததும்
நிறைந்த மனத்தோடு
அணையைத் திறக்காது
கனத்த மனத்தோடு
வெறுப்பைத் திறந்தததால்

இயற்கைக்கு முரணாய்
ஊரை எரித்துப் போகிறது
என்றும் எப்போதும்
இணைத்தே மகிழ்ந்த நீர்
அணைத்தே பழகிய நீர்

எங்கள் இயல்புக்கு மாறாய்
தீ ஒன்றே தீயை அணைக்குமோ
என்னும் விஷத்தினை
எம்முள் விதைத்தபடியும்
அதனைப் புயலாய் வளர்த்தபடியும்

விளைவது கண்டேனும்
இதயக் கனம் குறைப்பீர்
இந்தியாவின்
நலம் கருதி மட்டுமன்றி
உங்கள் நலன் கருதியேனும் 

10 comments:

  1. எரிக்கும் நீர்! அருமை. தீயை அணைக்கும் நீர் இப்போது ஊரை எரிக்கிறது. நல்ல வார்த்தையாடல்.

    ReplyDelete
  2. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுதான் அவர்களின் 'சித்த'மோ :)

    ReplyDelete
  3. //என்றும் எப்போதும்
    இணைத்தே மகிழ்ந்த நீர்
    அணைத்தே பழகிய நீர்.. //

    அருமை! நீரின் இயல்பு மனிதர்களிடம் படியும் நாள் எப்போது?..

    ReplyDelete
  4. அனைத்தும் அரசியலாய் போய்விட்டது
    மனிதம் மரித்துததான் போய்விட்டது

    ReplyDelete
  5. நீரூற்றி அணைக்காமல் நீரூற்றி வளர்க்கிறார்களே காவிரி அரசியல் இன்னும் எத்தனை காலத்திற்கு! தகுந்த மழைநீர் சேகரிப்பு இருந்தால் நூறு காவிரிகள் தமிழகத்தில் ஓடாதா?

    ReplyDelete
  6. குடிக்க நீர் தட்டுப்பாடு சமயத்தில் நெருப்பை அணைக்க நீர்

    ReplyDelete
  7. அருமையான வார்த்தையாடல். தலைப்பும் அருமை!

    அரசியல் என்று வந்து விட்டால் எல்லாமே எரிந்து விடும் போல..

    ReplyDelete
  8. BRO HOW MANY OF YOU WOULD KNOW THAT EVEN IN BANGALORE CITY WATER POROBLEM EXISTS I HAVE BEEN HERE FOR THE PAST FIVE YEARS
    A GOOD WATER GOOD CLIMATE WERE THE ASSETS IN BANGALORE
    BUT ALAS BOTH ARE MISSING.......EVEN YOUR CLOSE FRIENDS TURN THEIR HEADS IN DISAPPROVAL AFTER THE S C JUDGEMENT

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் இருக்கப் போகிறது என்று பலரும் சொல்வது உண்மையாகிவிடும் போலிருக்கிறது...

    ReplyDelete
  10. உண்மைதான் !இரமணி !எங்கே? இந்தியாவா அமெரிக்கவா அறிய ஆவல்!

    ReplyDelete