Thursday, September 22, 2016

நிழலின் சூட்சுமக் சமிக்ஞைகள்...

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர

வேறு எதை எதையோ
அறிவுறுத்த முயலும்
நிழலில் சமிக்ஞைகள்
எனக்குப்  புரிந்ததில்லை எப்போதும்

நான் பிறக்கப் பிறந்து
என்னையேத் தொடர்ந்து
என்னுடனே மரிக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
ஏனோ புரிந்ததில்லை என்றென்றும்

நான் எப்போதும் போலிருப்பினும்
சிலபோது பின்னே
விஸ்வரூமெடுத்து
சிலபோது
முன்னே மிகச் சுருங்கி
பலசமயம்
கால் மிதிபடக் கிடந்து
இரவில்இருளில்
முற்றாய்ஒடுங்கி

என்னவோ சொல்ல நினைக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
புரிந்ததில்லை எஞ்ஞாளும்

ஈரக்காற்றின் சமிக்ஞை
வெளுக்கும் கிழக்கின் சமிக்ஞை
மலர்மொட்டின் சமிக்ஞை
குழந்தையின் சமிக்ஞை
ஊமையனின் சமிக்ஞை
நாணமுற்றவளின்  சமிக்ஞை
பிற மொழியாளரின் சமிக்ஞை
அனைத்தையும்
புரிந்து கொள்ளக் கூடும் என்னால்

இன்றுவரை
எனக்கான
எனக்கானது மட்டுமே ஆன
என்னை விட்டு நொடியும் விலகாத

என் நிழலின்
பிறச்  சூட்சுமச் சமிக்ஞைகளை மட்டும்
எப்படி முயன்றும்
ஏனோ புரிந்து கொள்ளமுடியவில்லை
இந்த நொடி மட்டும்

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர...

15 comments:

  1. சூப்பர் சார்

    ReplyDelete
  2. //நான் எப்போதும் போலிருப்பினும்
    சிலபோது முன்னே
    விஸ்வரூமெடுத்து
    சிலபோது
    முன்னே மிகச் சுருங்கி
    பலசமயம்
    கால் மிதிபடக் கிடந்து
    இரவில்இருளில்
    முற்றாய்ஒடுங்கி..... /

    இதெல்லாமோ என் நிழலின் சமிக்ஞைகள்?
    'நான்' என்றல்லவோ நினைத்துக் கொண்டிருக்கிறேன்?...

    ReplyDelete
  3. நம் நிழலின் சமிக்ஞைகளை இதைவிட எப்படி அழகாக விரிவாக எடுத்துச் சொல்ல முடியும்!

    மீண்டும் மீண்டும் நிழல் போல இந்தப்பதிவினையே தொடர்ந்து நானும் ஊன்றிப் படித்து மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. நிழல் நிஜமானதைப் படிக்கும்போது ரசனையாக இருந்தது.

    ReplyDelete
  5. அருமையான பாவரிகள்

    ReplyDelete
  6. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. நிழலாய் துரத்தும் நினைவுகள் அணிவகுப்பு மிக்க நன்று

    ReplyDelete
  8. ஸ்ரீராம். //

    உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்பின்னூட்டதிற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Geetha M //

    உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்பின்னூட்டதிற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஜீவி //

    உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் கவித்துவமான
    பின்னூட்டதிற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அருமை..பல அர்த்தங்களைச் சொல்லிய வரிகள்..

    ReplyDelete
  12. ji this one is your best among the recent
    ones

    ReplyDelete