தனக்கென
ஒரு நிறமற்றுக் -கூடும்
நிலமதன்
நிறம்பெற்று..
தனக்கென
ஒரு சுவையற்றுச் -சேரும்
பொருளதன்
சுவைப்பெற்று..
தனக்கென
ஒரு திசையற்றுச் -சரிவு
இழுத்திடும்
திசைப்பெற்று
தனக்கென
ஒரு சுகமற்றுப் -பரவும்
வழிகளில்
சுகமீந்து
சீரும் சிறப்புமாய்
திகழ்ந்தக் காவேரி-நாளும்
சீறிப் புலியாகப்
பாய்ந்தக் காவேரி
தமக்கிது
உரியதென்று-வன்மம்
கூட்டுவோர்
நிலைக்கண்டு
தமக்குள்
அடக்கிடவே-முயல்வோர்
அடாவடிச்
செயல்கண்டு
தமதெல்லைத்
தாண்டுதலைப் -பொறாதுச்
சீறுவோர்
வெறிகண்டு
தனக்குள்
எரிகிறாள்-ஊழிக்
காலத்து
நெருப்பாக
கௌரவர்
சபையினில்-பாஞ்சாலி
நின்றிட்ட
நிலைபோல
எதிர்கட்சி
எல்லோரும்- ஊமையாய்ப்
பாண்டவர்
நிலைகொள்ள
ஆளூவோர்
எல்லோரும்-குருட்டுத்
திருதிராஷ்டிரன்
நெறிகொள்ள
தவியாய்த் தவிக்கிறாள்
நம்தாய்க் காவேரி-தன்னை
விடுவிக்கத் துடிக்கிறாள்
பூம்புகார்க் காவேரி
வீடெரிய
வெற்று வீதியினைக்
காத்தல்
காவலனின்
கடமை ஆமோ ?
அன்னையின்
கரமிழுக்கும்
காமுகனைப்
பொறுத்திடுதல்
கண்ணியம் ஆமோ ?
காவிரியின்
வழிமறிக்கும்
கயவர்களின்
செயல்பொருத்தல்
கட்டுப்பாடு ஆமோ ?
இனம் வாழ
ஜாதிகடந்து
மதம் கடந்து
கட்சிகடந்து
நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்
பொறுப்பதில்
பூமியெனினும்
பொங்கிடின்
எரிமலையென
உலகிது
உணரச் செய்வோம் வாரீர்
ஒரு நிறமற்றுக் -கூடும்
நிலமதன்
நிறம்பெற்று..
தனக்கென
ஒரு சுவையற்றுச் -சேரும்
பொருளதன்
சுவைப்பெற்று..
தனக்கென
ஒரு திசையற்றுச் -சரிவு
இழுத்திடும்
திசைப்பெற்று
தனக்கென
ஒரு சுகமற்றுப் -பரவும்
வழிகளில்
சுகமீந்து
சீரும் சிறப்புமாய்
திகழ்ந்தக் காவேரி-நாளும்
சீறிப் புலியாகப்
பாய்ந்தக் காவேரி
தமக்கிது
உரியதென்று-வன்மம்
கூட்டுவோர்
நிலைக்கண்டு
தமக்குள்
அடக்கிடவே-முயல்வோர்
அடாவடிச்
செயல்கண்டு
தமதெல்லைத்
தாண்டுதலைப் -பொறாதுச்
சீறுவோர்
வெறிகண்டு
தனக்குள்
எரிகிறாள்-ஊழிக்
காலத்து
நெருப்பாக
கௌரவர்
சபையினில்-பாஞ்சாலி
நின்றிட்ட
நிலைபோல
எதிர்கட்சி
எல்லோரும்- ஊமையாய்ப்
பாண்டவர்
நிலைகொள்ள
ஆளூவோர்
எல்லோரும்-குருட்டுத்
திருதிராஷ்டிரன்
நெறிகொள்ள
தவியாய்த் தவிக்கிறாள்
நம்தாய்க் காவேரி-தன்னை
விடுவிக்கத் துடிக்கிறாள்
பூம்புகார்க் காவேரி
வீடெரிய
வெற்று வீதியினைக்
காத்தல்
காவலனின்
கடமை ஆமோ ?
அன்னையின்
கரமிழுக்கும்
காமுகனைப்
பொறுத்திடுதல்
கண்ணியம் ஆமோ ?
காவிரியின்
வழிமறிக்கும்
கயவர்களின்
செயல்பொருத்தல்
கட்டுப்பாடு ஆமோ ?
இனம் வாழ
ஜாதிகடந்து
மதம் கடந்து
கட்சிகடந்து
நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்
பொறுப்பதில்
பூமியெனினும்
பொங்கிடின்
எரிமலையென
உலகிது
உணரச் செய்வோம் வாரீர்
காவிரியின் நிலையைப் பார்த்து வேதனைப்பட வேண்டிய நிலையாகிவிட்டதே. உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தும் கவிதை.
ReplyDeleteஅவசியம் உணரச் செய்ய வேண்டும் ஐயா
ReplyDeleteவேதனைதான் அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் வேதனையை.
ReplyDelete/நாளைநாம்
ReplyDeleteகளத்தில் நிற்போம் வாரீர்/ எந்த களத்தில்..?
நாம் அனைவரும் இந்தியர் என்ற களத்தில் நின்று நம்நாட்டு மக்களுக்கு எல்லாமும் எல்லோருக்கும் என்ற நிலை வரவேண்டும்.
ReplyDeleteG.M Balasubramaniam said...
ReplyDelete/நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்/ எந்த களத்தில்..?//
போராட்டக் களத்தில்
அது வீதியா, வீடா
அது அவரவர் நிலைப் பொறுத்து..
வேதனை....
ReplyDeleteவேதனையும், ஆத்திரமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.
ReplyDeleteவேதனையும், ஆத்திரமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.
ReplyDelete