Monday, November 14, 2016

யாருமறிந்த பரம இரகசியம்

வருகிற 19 ஆம் நாள் இடைத்தேர்தல்
நடைபெற இருக்கிற மூன்று தொகுதிகளில்
அடியேன் வசிக்கிற திருப்பரங்குன்றம்
தொகுதியும் ஒன்று

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
செய்தியைக் கூட கேட்க முடியாது சுமார்
இருபத்திரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட
வாக்குவித்தியாசத்தில் வென்ற அ.இஅ.தி.மு.க
வேட்பாளர் எஸ் எம் சீனிவேல் அவர்கள்
மரணமடைந்ததால் ஏற்பட்டக் காலியிடத்திற்காக
நடைபெறுகிற இந்த இடைத்தேர்தலின் முடிவு
எப்படி இருக்கும் என பிற மாவட்டங்களில்
இருந்து எனது  நண்பர்கள் தொடர்ந்து
கேட்டுக் கொண்டிருப்பதால் இதை
எழுத வேண்டியுள்ளது

பொத்தாம் பொதுவாக எல்லோரும் இடைத்தேர்தல்
என்றால் அதிகார துஸ்பிரயோகம், மற்றும்
பணப்பலம் இவற்றால் ஆளும்கட்சி வெல்லும்
எனச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாலும்
உண்மை அது மட்டும் இல்லை

வேட்பாளர்களைப் பொருத்த மட்டில்
நிஜப் போட்டியுள்ள அஇஅதிமுக மற்றும்
திமுக வேட்பாளர்களில்,

ஏற்கென்வே இந்தத் தொகுதியில்
வென்று தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை
என்கிற கருத்து அஇஅதிமுக வேட்பாளர் குறித்த
எதிர்மறையான  அபிப்பிராயம் உள்ள போதும்,

தி.மு.க  வேட்பாளரைப் பொறுத்தமட்டில் ,
மருத்துவராய் இருந்து தனது சொந்த டிரஸ்ட் மற்றும்
அரிமா சங்கம் முதலானவைகளில் தன்னை
இணைத்துக் கொண்டு ,தொடர்ந்து சேவைகள்
செய்து கொண்டிருக்கிறவர் என்ற போதும்,

, இளையவர் இனியவர்
அணுக எளிதானவர் என்கிற நேர்மைறையான
அபிப்பிராயம்  கொண்டவர்  என்ற போதும்

இந்தத் தொ குதியையே
பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதும்,

இந்தத் தொகுதியில் அ.இ அ.தி.மு.க வேட்பாளரே
 அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு
இன்றைய நிலவரப்படி
உள்ளதெனில் அதற்கான முழுமையான காரணம்

பணபலம்,அதிகார துஸ்பிரயோகம் என மட்டும்
எனச் சொல்லிவிட முடியாது

மாறாக அ.இ.அ.தி.முக கட்சித் தலைவர்களின்
மிகச் சரியான தேர்தல் வியூகமும்,
அதற்கேற்றார்ப்போல கட்டுக் கோப்போடு
செயல்படும் தொண்டர்களின் செயல்பாடும் என்றால்
நிச்சயம்அது மிகை இல்லை

கட்சி கடந்து பொது வாக்காளர்களையும்  கவரக் கூடிய
ஆளுங்கட்சிக்கு இணையாக அனைத்து விதத்திலும்
ஈடு கொடுக்கக் கூடிய ஒரு வேட்பாளர் கிடைத்தும்
இந்தத் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குவித்தியாசத்தில்
தோல்வியத் தழுவுமாயின்,

அதற்கான காரணம் அவர்களாகத்தான்
இருக்கமுடியுமே தவிர,
வேறு ஜால்ஜாப்புகள்  எல்லாம்
நிச்சயம் சப்பைக்கட்டுகளே எனக் கொள்ளலாம்

பார்ப்போம்....

7 comments:

  1. அம்மாவின் மருத்துவ நிலைமை வேறு அதிமுகவுக்கு வாக்குகளை கொடுக்கும் ! ?

    ReplyDelete
  2. பார்ப்போம் நடப்பது எப்படியென்று... யார் ஜெயித்தாலும் மக்கள் பிரச்சினைகள் மட்டும் தீர்க்கப்படாது அது உறுதி
    த.ம.2

    ReplyDelete
  3. அடியேனின் தொகுதியிலும் தேர்தல்நடக்க இருக்கிறது
    பார்ப்போம் ஐயா

    ReplyDelete
  4. இதையும் மீறி எதிர்க்கட்சி வென்றால் அதிசயம் தான்.

    ReplyDelete
  5. இதையும் மீறி எதிர்க்கட்சி வென்றால் அதிசயம் தான்.

    ReplyDelete
  6. நீங்கள் சொன்ன மாதிரியே நடந்து விட்டதே...

    ReplyDelete