Saturday, November 26, 2016

அது ஒரு சுகலயம்...

மொட்டாகி
மெல்ல மெல்ல
விரிந்து
மணந்து
அழகூட்டும் மலரை.

பறித்து
மாலையாக்கிப் பார்க்க...
அது ஒரு அழகு

செடியின் அணைப்பிலேயே
துயிலப் பார்க்க
அது ஒரு அழகு

உறக்கத் தில்
எதனிலோ
மயங்கி
இரசித்துச் சிரிக்கும்
மலரனைய மழலையை

அணைத்து
முத்தமிட
அதுஒரு பெரும் சுகம்

எட்ட நின்று
அப்படியே இரசிக்க
அது ஒரு தனிச்சுகம்

குளிர் ஊற்றென
மெல்லச்சுரந்து
பரவி
நிறையும்
கவித்துவ உணர்வை

சொல்லில்
அடக்கிப் பார்க்க
அது ஒருஅருந்தவம்

அதனுள்
விழிமூடி ஒன்றிட
அது ஒரு சுகலயம்

9 comments:

  1. //குளிர் ஊற்றென மெல்லச்சுரந்து பரவி நிறையும்
    கவித்துவ உணர்வை சொல்லில் அடக்கிப் பார்க்க
    அது ஒரு அருந்தவம்//

    ஆஹா .... ‘அது ஒரு சுகலயம்...’ என்பதில் கொடுத்துள்ள ஒவ்வொரு உதாரணங்களும் சுக லயமே தான். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. ரசித்தேன்.

    ReplyDelete
  3. ஆகா
    இலயித்து எழுதியுள்ளீர்கள் ஐயா

    ReplyDelete
  4. செடியின் அணைப்பிலேயே
    துயிலப் பார்க்க
    அது ஒரு அழகு//

    செடியில் பார்க்கும் போது அதன் அழகு மனதை கவரும்.

    ReplyDelete
  5. "குளிர் ஊற்றென மெல்லச்சுரந்து
    பரவி நிறையும் கவித்துவ உணர்வை
    சொல்லில் அடக்கிப் பார்க்க
    அது ஒருஅருந்தவம்" என்பதை
    பட்டறிந்து பயின்றேன் ஐயா!

    ReplyDelete
  6. அழகும் சுகமும் லயமாக . வாழ்த்துகள்

    ReplyDelete
  7. கவிலயத்தை ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete