Thursday, January 26, 2017

எங்கள் எளிய இனிய முதல்வரே

அமைதிக்கும்
இயலாமைக்கும்
வித்தியாசம் தெரியாதவனே
அமைதியைக்
குறைவாய் மதிப்பிடுகிறான்

பொறுமைக்கும்
எருமைமாட்டுத்தனத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவனே
பொறுமையைக்
குறைவாய் மதிப்பிடுகிறான்

பணிவிற்கும்
பயத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவனே
பணிவினைக்
குறைவாய் மதிப்பிடுகிறான்

அமைதியாய்
பொறுமையாய்
பணிவாய்
மிக மிக நேர்த்தியாய்
செயலாற்றும்

எங்கள் முதல்வரே
எளிய இனிய முதல்வரே

கடல் நீரை மறைத்திருக்கும்
பனிக்கட்டிகள்
கடலல்ல

இன்று
கட்சியைக் கைப்பற்றியவர்கள்
தொண்டர்களின்
மனப்பிரதிபலிப்புமல்ல

பதவியால் பெருமைகொள்பவர்கள் 
மக்களின்
மனமறிந்தவர்களுமல்ல

வெள்ளைக் கோழிக்கு
வர்ணம் பூசி
வெகு நாட்கள்
ஏமாற்றமுடியாது

மழை வந்தால்
அது வெள்ளைக் கோழியென
உலகுக்குத் தெரிந்துவிடும்

அப்படித்தான்
தேர்தல் வந்தாலும்....

இதுவரை
குடியரசு  நாளில்
எந்தத்  தமிழக  முதல்வரும் பெறாத
பேறு  பெற்றதுக்  கூட
அதிர்ஷ்டத்தினால்  அல்ல
அது
இறைவனின் ஆசியால் தான்

இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்களுடன்...

9 comments:

  1. எதற்கும் அஞ்சாமல் இவ்வாறே தொடர்ந்தால் நல்லது...

    ReplyDelete
  2. சரிதான்...தொடர்ந்தால் நல்லது...பார்ப்போம்..

    ReplyDelete
  3. தொடர வேண்டுவோம்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. நல்ல முறையில் பணி செய்ய வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே.....

    ReplyDelete
  5. பொறுமையாகவும், பக்குவமாகவும், எளிமையாகவும், சாயம் பூசப்படாத வெள்ளைக் கோழியாகவேதான் காட்சியளிக்கிறார்.

    இப்போதைக்கு இவரே இருப்பதுதான் மிகவும் நல்லது என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

    ReplyDelete
  6. Very good comment reflecting intentions of the most MGR/Amma followers of AIADMK. Thanks sir

    ReplyDelete
  7. Very good comment reflecting intentions of the most MGR/Amma followers of AIADMK. Thanks sir

    ReplyDelete