ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு
அதுவரை எங்கோ புதைந்துக் கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது
அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது
என்னுள்
கேட்பாரின்றிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது
என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளைச்
சேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்
பெருமைப்படவும் ஏதுமில்லை
ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு
அதுவரை எங்கோ புதைந்துக் கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது
அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது
என்னுள்
கேட்பாரின்றிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது
என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளைச்
சேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்
பெருமைப்படவும் ஏதுமில்லை
ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது
தன்னடக்கத்துடன் பற்றிக்கொண்டு எரியும் அனுபவக் கனல் சுடாமல் சுகமளிப்பதாகவே உள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteஇம்மாதிரி படைப்புகளின் துவக்கமோ
ReplyDelete
ReplyDelete"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல...
அருமையான பதிவு
அத்தனையும் உண்மை.
ReplyDelete//"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
எப்போதும்போல
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது.. //
லேசில் திருப்தை அடையாத மனசு!
================================================
திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசம் இல்லை.
--- ஜெயகாந்தன்
================================================
அத்தனையும் உண்மை...........
ReplyDeleteஅருமை....
ReplyDelete