Monday, January 9, 2017

இதுவே நம் ஜனநாயகத்தின் பலம் ?

நிழலை நிஜமென
நம்பத் துவங்கி
வெகு நாளாகிவிட்டது

கவர்ச்சியே நிலைக்குமென
நம்பத் துவங்கி
அதுவே நிஜமும் ஆகிவிட்டது

இப்போது தன்மானம்
குறித்துப் பேசி எங்களை
சராசரி ஆக்க முயலவேண்டாம்

பதவியின் சுகம்
அறியாத வரையில்

அதிகார போதையில்
வீழாத வரையில்

முதுகெலும்பு குறித்தும்
மண்டியிடிதல் குறித்தும்

நாங்களும் பேசியவர்கள்தான்
மீசையை முறுக்கியவர்கள்தான்

புலிவால் பிடித்துவிட்டோம்
இதை விட்டுவிட முடியாது

சேர்ப்பதையும்
விட்டுவிடமுடியாது
சேர்ந்ததையும்
விட்டுவிடமுடியாது

தேர்தல் காலங்களில்
உங்களை நாங்கள்
புரிந்து கொள்வதைப் போல

அது அல்லாத காலங்களில்
நீங்கள் எங்களைப்
புரிந்து கொள்ளுங்கள்

அதுவே  இருவருக்கும்  நல்லது
இன்னும் இலக்கியத் தரமாய்ச் சொன்னால்
(நம்மை நம்பி  நாசமாகிக் கொண்டிருக்கும் )
நம் ஜன நாயகத்திற்கும்,,,,,, ( ? )

8 comments:

  1. Replies
    1. ஓர் கும்பீடு...! என்று முடித்திருக்க வேண்டுமோ...?

      Delete
  2. கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எழுதிய கனமான வரிகள் இவை:
    "முதுகெலும்பு குறித்தும்
    மண்டியிடிதல் குறித்தும்

    நாங்களும் பேசியவர்கள்தான்...."

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  3. கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஆட்டு மந்தைகள் தானே? வேறு வழி இல்லை இனி என்ன செய்யலாம் என சொல்லிச்சொல்லியே....................?

    ReplyDelete
  4. முதுகெலும்பு குறித்தும்
    மண்டியிடிதல் குறித்தும்

    நாங்களும் பேசியவர்கள்தான்
    மீசையை முறுக்கியவர்கள்தான்

    அருமை
    சரணம் சரணம்
    பாதமே சரணம் என்றல்லவா
    விழுந்து கிடங்கிறார்கள்
    வேதனை

    ReplyDelete
  5. மண்டியிடுதல் நம் ரத்தத்தில் ஊறிய விஷயமல்லவா

    ReplyDelete
  6. நிழலை நிஜமென
    நம்பத் துவங்கியதன் விளைவை
    விளைவின் அறுவடையின் போது தான்
    உணர முடிகிறதே!

    ReplyDelete
  7. முதுகெலும்பு குறித்தும்
    மண்டியிடிதல் குறித்தும்

    நாங்களும் பேசியவர்கள்தான்
    மீசையை முறுக்கியவர்கள்தான்//
    உண்மை...அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் ஜனநாயகம்...அது ஒழிந்து வருடங்கள் ஆகிவிட்டதே

    ReplyDelete