Friday, February 24, 2017

சுனாமியாய்ச் சீற இருக்கிற எதிர்ப்புக்கு ...

ஒளிந்து நெளிந்து ஓடும்
சிற்றோடை
எதை சாதித்து விடப் போகிறது
என நகர வாசி நினைக்க

நாளை வரவிருக்கும்
காட்டாற்றுக்குச் சிற்றோடை
வழியமைத்துப் போகிறது
எனப்புரிந்து கொள்கிறான மலைவாசி

அனாதையாய்,ஒடுங்கிப் போகும்
ஒற்றயடிப் பாதையால்
பயன் என்ன இருந்துவிடப் போகிறது
எனப் பாமரன் நினைக்க

நாளை வர இருக்கும்
நாற்கரச் சாலைக்கு ஒற்றையடிப் பாதையே
மையக் கோடாய் இருக்குமெனப்
புரிந்து கொள்கிறான் பொறியாளன்

ஒளிந்து மறைந்து எதிர்ப்பை
முனகலாய் வெளிப்படுத்துவோரால்
என்ன செய்து விட முடியும்
எனக் கொக்கரிக்கிறான் அதிகாரமுள்ளவன்

தேர்தல் காலங்களில்
சுனாமியாய்ச்  சீற   இருக்கிற எதிர்ப்புக்கு
இந்த முனகலே ஆரம்ப அறிகுறி எனப்
புரிந்து கொள்கிறான் அரசியல் அறிந்தவன்

9 comments:

  1. அழகழகான உதாரணங்களுடன் அற்புதமான முடிவுரை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமை... சிறு துளி பெருவெள்ளம் போல...

    ReplyDelete
  3. அருமை
    அருமை
    ஆனால் அரசியல் வாதிகள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லையே ஐயா

    ReplyDelete
  4. உண்மையைத்தான் சொல்கிறீர்கள். புரிகிறவர்களுக்குப் புரியட்டும்.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  5. முனகல் சுனாமியாச் சீறினால் தேவலை

    ReplyDelete
  6. நல்ல கவிதை. மக்களின் சக்தியை அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் புரிந்து கொண்டால் நல்லது.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    புரிகிறவர்களுக்கு புரியும் சொல்லிய விதமும் முடித்த விதமும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா... வழமைபோல இனி வலைப்பக்கம் தொடர்வேன்....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete