Thursday, February 16, 2017

தமிழினத்தின் நிஜமான திருநாள்

சிலரோட ஆசைக்கு
பலபேரின் தேவைகளைப்
பலிவாங்கும் நாடாகிப் போச்சே--நாடே
பலிபீடம் போலாகிப் போச்சே

சிலகோடிக் காசுக்கு
பலகோடி பொதுஜனத்தின்
நிலைமறந்தோர் வசமாகிப் போச்சே-அரசியல்
கூவத்தினும் மோசமாகிப் போச்சே

சபதமதும் தியானமதும்
நல்லோர்க்கு என்றிருந்த
வழக்கொழிந்து நாசமாகிப் போச்சே-தீயோர்
கைத்தடியாய் அதுவுமாகிப் போச்சே

பணபலமும் அராஜகமும்
இரதமேறிப் பவனிவர
இனமானம் குப்பையென ஆச்சே-எல்லாம்
பழங்கதையாய் வெறும்கனவாய்ப் போச்சே

ஆடுவோர்கள் ஆட்டமெல்லாம்
அடங்கிவிடும் நிச்சயமாய்
மாறுபாடு இல்லையிதில் தம்பி--நீ
மனதிலிதை பதித்திடுவாய் நம்பி

புலம்பலதை  மனக்கசப்பை
புயலாக நெருப்பாக
சிதறாது  மாற்றிடுவோம்  ஒருநாள்---அதுதான்
தமிழினத்தின் நிஜமான திருநாள்

7 comments:

  1. நீறு பூத்த நெருப்பு அதை காப்பது நம் பொறுப்பு. தோற்றிடினும் துயருற ஏது மில்லை. நம் தலை யெழுத்து யெனப் புலம்ப தேவையே இல்லை. எல்லா தருணங்களி லும் தேவதைகளே நன்மை காக்கு மென மூட நம்பிக்கை கொள்ளாமல் சாத்தான்களின் செயல்களும் நன்மை பயக்கு மென நம்பிக்கை கொள்வோம்

    ReplyDelete
  2. தமிழினத்தின் திருநாள் விரைவில் தோன்றட்டும்

    ReplyDelete
  3. நீறு பூத்த நெருப்பு அதை காப்பது நம் பொறுப்பு. தோற்றிடினும் துயருற ஏது மில்லை. நம் தலை யெழுத்து யெனப் புலம்ப தேவையே இல்லை. எல்லா தருணங்களி லும் தேவதைகளே நன்மை காக்கு மென மூட நம்பிக்கை கொள்ளாமல் சாத்தான்களின் செயல்களும் நன்மை பயக்கு மென நம்பிக்கை கொள்வோம்

    ReplyDelete
  4. விரைவில் அந்த திருநாள் வரும் என நம்புகிறேன்...

    ReplyDelete
  5. அந்த நிஜமான திருநாள் சீக்கரமாக வரட்டும்.

    ReplyDelete
  6. தமிழ்நாட்டின் நிலைமை இப்படி ஆகிப் போனதே....நல்ல நேரம் வரும் வரும் என நம்புவோம்...வேறு வழி

    ReplyDelete
  7. உங்கள் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்

    ReplyDelete