Wednesday, February 8, 2017

எதிரில் இருப்போனிடம் சிறப்புக்கள் இருப்பினும் முறைத்தே நகரவும்....

முதல்வரே நீர்
எதிர்கட்சித் தலைவரைப் பார்த்து
முறைத்திருக்கலாம்
முகம் சுழித்திருக்கலாம்
அல்லது
முடியுமானால்
பல்லை நற நறவெனக்
கடித்திருக்கலாம்

மாறாக

இப்படிச் சிரித்துத் தொலைத்து
நம் பண்பாடு மறந்தீரே
நம் கலாச்சாரம் மறந்தீரே

அதனால்
பதவியையும்
இழக்க இருக்கிறீர்களே

தன் மனைவியைக்
கவர்ந்து சென்றவன் ஆயினும்
ஆயுதங்களை இழந்து நிற்கையில்
இன்று போய் நாளை வா
எனச் சொன்னவர்
நம்மவரில்லை

இறுதி அஞ்சலிக்கு
முதல்வரும்
எதிர்கட்சிக்காரரும்
சேர்ந்து வரும் அநாகரீகம் ( ? )
நிச்சயம் பண்பாட்டுச் சூழலுக்கு
உகந்ததே இல்லை

இதனை மறந்து
எதிராக இருப்பதால்
எதிரி இல்லை என நினைத்துச்
சிரித்துத் தொலைத்தீரே
முதல்வரே
அதனால்
பதவியையும்
இழந்துத் தொலைத்தீரே

இனியேனும்...............
உடன் இருப்போன்
துரோகியாயினும்
சிரித்து வைக்கவும்

எதிரில் இருப்போனிடம்
சிறப்புக்கள்  இருப்பினும்
முறைத்தே   நகரவும்

அதன் மூலம்
நம் பண்பாடும்
தொடர்ந்து
நிலைக்கவும்  செழிக்கவும் ( ? ) ......

10 comments:

  1. தமிழகத்தின் நிலை மாறவே மாறாதா!

    ReplyDelete
  2. பரவாயில்லையே....முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் நல்ல முறையில் இருக்கிறார்களே தமிழ்நாட்டிற்கு நல்லது நல்ல ஆரோக்கியமான சூழல் என்று நினைத்த வேளையில்...ஹும் என்ன சொல்ல...வேதனை....

    ReplyDelete
  3. டோனால்ட் ட்ரம்பும் ஹில்லாரியும் ஒருவரை ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தில் கழுவிக் கொட்டி கொண்டிருந்தனர் ஆனால் பதவி ஏற்பின் போது இருவரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர் அந்த பண்பாட்டை இந்திய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. தென்னகத்தில்தான் இந்தக் காழ்ப்பும் வெறுப்பும்

    ReplyDelete
  5. தமிழன்டா ... என்ற ஒரு குரல் கேட்கிறது

    ReplyDelete
  6. எப்போது மாறுவார்கள்.....

    மாற வழியேயில்லை என்று தான் தோன்றுகிறது!

    ReplyDelete