Wednesday, April 19, 2017

யார் யார் காரணமோ அவர்கள் வாழ்க

யார் யார் காரணமோ
அவர்கள் வாழ்க

முந்தைய ராஜாராணிக்கதைகளில்
மன்னனின்
சிறு பலவீனத்தைப் பயன்படுத்தி
நாட்டை நாசகாடாக்கும்
சதிகாரர்கள் போல்

புரட்சித் தலைவியின்
ஏதோ ஒரு
பலவீனப்படுத்தைப் பயன்படுத்தி
தமிழகத்தையே சூறையாடிய
ஒரு சதிகாரக் குடும்பத்தை

சட்டமும் நீதியும் தண்டித்தும்
அடங்காது விஷ நாகமாய்
வேறு உருவில் சீறி
மீண்டும் தமிழகத்தை கொள்ளையிடத் துணிந்த
ஒரு மனச்சாட்சி அற்றக் குடும்பத்தை

உல்கின் மூத்தக் குடிமக்கள்
எனப் பெருமிதம்கொண்டத் தமிழினத்தை
உலகின் "பெரும் குடி "மக்களாக்கி
தன் ஆலைச் சரக்கு விற்பனைக் களமாக்கிய
ஒரு சுய நலக்கூட்டக் கும்பலை

அதிகார வட்டத்திலிருந்து
விலக அல்லது வெளியேற்ற
யார் காரணமோ
யார் யாரெல்லாம் காரணமோ
அவர்கள் எத்தன்மையுடையவராயினும்
அவர்கள் வாழ்க

8 comments:

  1. தலைக்கு மேல் கத்தியாய் இருந்த , உட்கட்சிப் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது,இனியாவது மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துமா அரசு :)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எப்படியேனும் நல்லது நடந்தால் நல்லது

    கீதா

    ReplyDelete
  5. பாம்பின் தலை ஒரு பக்கமும் வால் ஒரு பக்கமும் இருந்தது. இப்போது இரண்டும் இணைந்துவிட்டது என்றால், பழைய பாம்பு தானே உயிர் பெற்றுவிட்டதாக அர்த்தம்? இதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை என்று பட்சி சொல்கிறதே!

    ReplyDelete
  6. மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் காலம் வேண்டும் போல...
    த.ம

    ReplyDelete
  7. மக்கள் வாழ்வது எப்போது ஐயா

    ReplyDelete