Sunday, April 2, 2017

தரவரிசை...நாலாந்தரம் ..

"நாலாந்தரம் என்பதென்ன "
விள்க்கம் கேட்கிறான் நண்பன்

"நல்லதை
நல்லவிதமாகக் கொடுப்பது
முதல் தரமெனச் சொல்வதும்

நல்லதை
மோசமாகக் கொடுப்பது
இரண்டாம் தரமெனச் சொல்வதும்

நல்லதல்லாததை
மோசமாகக் கொடுப்பது
மூன்றாம் தரமெனச் சொல்வதும்
புரிகிறது

அது என்ன
நான்காம் தரம்
அதுவும் மூன்றைவிட
மிக மோசமானதாய்..."  

நல்ல கேள்வியாய்ப்படுகிறது எனக்கும்

நான் இப்படிச் சொன்னேன்

"அரசியல், சினிமா,பண்பாடு
கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என
அனைத்திற்கும்பொருந்தும்படியாய்
சொல்லட்டுமா " என்கிறேன்

"முடிந்தால் சுருக்கமாகச் சொல் " என்றான்

"நல்லதல்லாததை
மிகச் சிறப்பாகத் தருவது
அதுவும்
நாம் விரும்பும்படியாகவும்
நாம் படிப்படியாய்
நம்மையறியாது அதற்கு நாசமாகும்படியாகவும்"
என்கிறேன்

அவன் யோசிப்பதுப் புரிந்தது

ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்

9 comments:

  1. நல்லது அல்லாததை மிகச் சிறப்பாய்த் தருவது நாலாந்தரம்....

    இப்போது பல விஷயங்களில் அது தானே நடக்கிறது.

    ReplyDelete
  2. நாலாந்தரம் பற்றி ’நச்’சென்ற விளக்கம் நல்லாவே இருக்குது. :)

    ReplyDelete
  3. இப்போ புரிஞ்சுபோச்சு. நாலாந்தரம்ன்னா என்ன ன்னு இப்போ நல்லாவே புரிஞ்சு போச்சு. :)

    ReplyDelete
  4. விளக்கம் அருமை ஐயா!

    ReplyDelete
  5. இன்று அதிகம் காண்பது நாலாந் தரமே

    ReplyDelete
  6. அழகான வரிகளில்
    தர வரிசை அழகு தான்
    எப்பன்
    எல்லோருமே சிந்திப்போம்!

    ReplyDelete